வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொது இடத்தில் தர்ம அடி வாங்கிய 6 பிரபலங்கள்.. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கமல்

Actor Kamal Haasan: பொது மக்களுக்கு சினிமா நடிகர்கள் மீது எந்த அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு அவர்கள் ஏதாவது ஏடாகூடமாக செய்யும் பொழுது தங்களுடைய கோபத்தையும் காட்ட தவறியதே கிடையாது. அப்படித்தான் இந்த ஆறு பிரபலங்கள் தேவை இல்லாமல் வாய்விட்டு பொது இடத்தில், பொது மக்களிடமே தர்ம அடி வாங்கி இருக்கிறார்கள்.

சிம்பு: சிம்பு ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில வருடங்களில் அவருக்கு நிறைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவருடைய அப்பா டி ராஜேந்தரின் ரசிகர்கள் மொத்தமும் சிம்புவின் படங்களுக்கு முழு ஆதரவையும் கொடுத்து அவரை பெரிய ஹீரோ போல் பில்டப் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சிம்பு பைக்கில் செல்லும் பொழுது ஒருவரை இடித்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க தான் ஒரு பெரிய ஹீரோ என்பது போல் காட்ட முயற்சி செய்து ரோட்டிலேயே தர்ம அடி வாங்கி இருக்கிறார். அதன் பின்னர் தான் இவர் காரில் பயணிக்கவும் ஆரம்பித்தார்.

Also Read:போதிதர்மனுக்கு முந்தியே அசம்பாவிதங்களை கணித்த கமலின் 5 படங்கள்.. ஊழலில் கலங்க வைத்த மகாநதி

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் மனங்கொத்தி பறவை, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆக்சன் ஹீரோவாக காக்கி சட்டை படத்தில் களமிறங்கினார். அந்த படத்தில் அவர் கமலின் பழைய காக்கி சட்டை திரைப்படத்தை கிண்டல் அடிப்பது போல் நடித்திருக்கிறார் என்று ஒரு வதந்தி வந்து கமலின் ரசிகர்கள் தூத்துக்குடியை ஏர்போட்டில் வைத்து சிவகார்த்திகேயனை தாக்கினர். இந்த சம்பவம் நடக்கும் போது கமலும் அதே ஏர்போர்ட்டில் தான் இருந்திருக்கிறார். பின்னொரு பேட்டியில் கேட்கும் பொழுது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கமல் சொல்லி இருக்கிறார்.

விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் பெங்களூர் ஏர்போர்ட்டில் வைத்து நடந்தது. ஆனால் தர்ம அடி வாங்க வேண்டிய அவர் அவருடைய காவலரால் பிழைத்துக் கொண்டார். விஜய் சேதுபதி முத்துராமலிங்க தேவரை பற்றி ஏதோ தவறாக பேசியதால்தான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தமானதால் தான் அந்த ரசிகர் அவரை அடிக்க வந்ததாகவும் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அந்த ரசிகரின் மீது புகார் கொடுக்க சொன்னதற்கு விஜய் சேதுபதி வேண்டாம் என்று மறுத்துவிட்டு சென்றுவிட்டார்.

விஷால் : நடிகர் விஷால் ஏடாகூடமாக பேசாத இடங்களும் இல்லை, வாங்காத அடிகளும் இல்லை என்று சொல்லலாம். இதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் அவர் சார்ந்த ஜெயிக்கப் போகிறது என தெரிந்ததும், எதிர்க்கட்சியினர் கூட்டத்தைக் கூட்டி விஷாலை வச்சு செய்து அனுப்பி இருக்கிறார்கள். அதையும் அனுதாபமாக மாற்றி மீடியா முன்பு மயக்கம் போட்டு எல்லாம் விழும் அளவிற்கு விஷால் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

Also Read:கமல் தயாரிப்பில் கல்லா கட்ட போகும் 6 படங்கள்.. அஜித் கழட்டி விட்டதால் கூப்பிட்டு பட வாய்ப்பு கொடுத்த ஆண்டவர்

ஸ்ருதி ஹாசன் : எல்லோரும் பொது இடத்தில் மாட்டிக் கொண்டு தான் அடி வாங்கினார்கள் என்றால், நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தர்ம அடி வீடு தேடியே வந்திருக்கிறது. ஸ்ருதிஹாசனின் மும்பை வீட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் ஒரு நாள் அவருடைய வீட்டுக்கு கதவை தட்டி இருக்கிறார். ஸ்ருதிஹாசன் அவரே வந்து கதவை திறந்த பொழுது அந்த நபர் ஸ்ருதிஹாசனை அடித்து விட்டு ஓடி விட்டாராம்.

வடிவேலு : மதுரையில் விஜயகாந்த் வீட்டிற்கு வந்த ஒரு சிலரிடம் வைகைப்புயல் வடிவேலு தானும் பயங்கரமான ஆள் தான் என்று பில்டப் கொடுத்து ஓவராக பேசியதால் அந்த இடத்திலேயே செம்ம அடி வாங்கி இருக்கிறார். அந்த காண்டில் தான் அந்த வருட தேர்தலில் விஜயகாந்த்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு, அதன் பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் இவர்.

Also Read:இரவு 3 மணின்னு கூட பாக்கமா அதுக்கு கூப்பிடுவாங்க.. புலம்பித் தவிக்கும் 46 வயது கமல் பட நடிகை

Trending News