Goundamani: ‘ கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தால் போதும்’ இந்த பழமொழியை மக்களிடையே பிரபலமாக்கிய பெருமையே தமிழ் சினிமாவை தான் சேரும். காமெடி காட்சிகள் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது நம் காமெடி நடிகர்களுக்கு ஒண்ணும் புதிதல்ல. குழந்தைகள் முதற்கொண்டு இந்த காட்சியை பார்ப்பார்கள் என யோசிக்காமல் அசால்டாக பேசி விடுவார்கள். அப்படி தன்னுடைய காமெடி காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களை அதிகமாக உபயோகப்படுத்தும் காமெடி நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் 6 காமெடி நடிகர்கள்
கவுண்டமணி: டபுள் மீனிங் காமெடியில் பட்டம் பெற்றவர் என்று கூட கவுண்டமணியை சொல்லலாம், மணிமேகலை காமெடி, அழகுமணி காமெடி எல்லாமே டபுள் மீனிங் மற்றும் பாடி ஷேமிங் சார்ந்து தான் இருக்கும். பெண்களை தரை குறைவாக பேசுவது, காமெடியான காதல் காட்சிகளில் நடிக்கிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது என இவர் பண்ணாத அட்டூழியங்களே இல்லை என்று சொல்லலாம்.
வெண்ணிற ஆடை மூர்த்தி: வெண்ணிற ஆடை என்னும் படத்தின் மூலம் அறிமுகமானதால் தான் இவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என பெயர் வந்தது. குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இவர், பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் அதிகமாக வந்திருக்கிறார். இவர் பேசும் வசனங்கள் மற்றும் உடல் அசைவுகள் எல்லாமே டபுள் மீனிங்கில் தான் இருக்கும்.
எஸ் எஸ் சந்திரன்: நகைச்சுவை செல்வர், கலைமாமணி என தன்னுடைய சிறந்த நடிப்புக்காக உயரிய விருதுகளை பெற்றவர் தான் எஸ் எஸ் சந்திரன். இவர் வில்லத்தனமான கேரக்டரிலும் கலக்கக் கூடியவர். இவருடைய பெரும்பாலான நகைச்சுவை காட்சிகள் பெண்களை மையப்படுத்தியும், இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டதாகவும் தான் இருக்கும்.
சுருளிராஜன்: எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் நடிக்க தொடங்கி, ரஜினி மற்றும் கமல் முன்னணி ஹீரோக்கள் ஆகும் வரை வில்லன், குணச்சித்திரம், காமெடி என கலக்கியவர் சுருளிராஜன். 1980 ஆம் ஆண்டு சுருளிராஜன் நடிப்பில் வெளியான படம் முயலுக்கு மூணு கால் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களில் தான் பேசியிருக்கிறார்.
கல்லாப்பட்டி சிங்காரம்: பெரும்பாலும் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் படங்களில் தான் கல்லாப்பட்டி சிங்காரம் நடித்து இருக்கிறார். இவருக்கு பெரும்பாலும் பெண்களிடம் வழிவது, பொண்டாட்டியிடம் அடிவாங்குவது போன்ற கேரக்டர்கள் தான் அமையும். இதனாலேயே இவருக்கு இரட்டை அர்த்த வசனங்கள் தான் கொடுக்கப்படும்.