வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆள காணோம்னு தேடக்கூடிய நிலையில் இருக்கும் 6 நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பின் காணாமல் போன வையாபுரி

தன் டைமிங் காமெடிகளால் மக்களிடையே என்றும் எப்பொழுதும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வருபவர்கள் தான் காமெடி நடிகர்கள். தமிழ் சினிமாவில் காமெடி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது என்றென்றும் செந்தில்-கவுண்டமணி மற்றும் விவேக்-வடிவேலின் காமெடிகள் தான். இவர்களின் நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் பரவி சிறியவர் முதல் பெரியோர்கள் வரை ஈர்க்கப்பட்டு இருக்கும்.

இந்த நகைச்சுவை ஜாம்பவான்களை போல சினிமாவில் தன் காமெடியால் முத்திரை பதித்து மேற்கொண்டு படங்களில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கும் ஆறு காமெடி நடிகர்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

சாம்ஸ்: கிரேசி மோகனின் நகைச்சுவையால் ஈர்க்கப்பட்டு சினிமாவில் கால் பதித்தவர் சாம்ஸ். நாகேஷ் போன்று உடல் அமைப்பில் தன் காமெடி சென்சால் மக்களை கவர்ந்தவர். வருங்கால நாகேஷ் என்று மக்களிடையே எதிர்பார்ப்பை பெற்று பயணம், அபியும் நானும், ஒன்பதுல குரு ஆகிய படங்களில் தன் திறமையை இவர் வெளிக்காட்டினார். அதன்பின் சினிமாவில் போதிய முயற்சி எடுக்காததால் பட வாய்ப்பை இழந்தார்.

Also Read:காமெடி இல்லாமல் ஹீரோவாக விவேக் நிரூபித்த 5 படங்கள்.. சீரியசான கேரக்டரில் நடித்த ஒரே படம்

காளிவெங்கட்: இவர் தேக்கடி, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே வந்து தன் மாறுபட்ட திறனை வெளிக்காட்டி இருப்பார். மேலும் மெர்சல் படத்தில் பூங்கொடியின் தந்தையாக ஒரு சென்டிமென்ட் கேரக்டரில் நடித்திருப்பார். அது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த ஆண்டு 2022ல் வெளிவந்த டான் திரைப்படத்தில் இவரது பேராசிரியர் கேரக்டர் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

சத்தியன்: நடிகர் சத்யராஜ் போன்ற முகபாவனை கொண்ட இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். தளபதி விஜய் அவர்களின் துப்பாக்கி படத்தில் அவரின் நண்பனாக இடம்பெற்று இருப்பார். 2012ல் வந்த நண்பன் திரைப்படத்தில் வரும் சைலன்சர் கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. மேலும் இவருக்கு ராஜா ராணி திரைப்படம் தமிழ்நாடு மாநில திரைப்படத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பெயரைப் பெற்று தந்தது.

Also Read:வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

சிட்டிபாபு: தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் பயணத்தை துவங்கிய இவர் நகைச்சுவை மட்டுமின்றி பல திறன் கொண்டவர். சன் டிவியில் அசத்த போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மேலும் தன் திறன் பட்ட காமெடியால் மக்களை மகிழ்வித்தவர். அதன்பின் சிறிது காலம் உடல்நிலை குறைவால் இருந்த இவர் தன் 49 வது வயதிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற புகழ்பெற்ற கலைஞனை தமிழ்சினிமா இழந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

வையாபுரி: தொலைக்காட்சி தொடரான சின்ன மருது பெரிய மருது மற்றும் மால்குடி டேட்ஸ் ஆகிய தொடர்களில் தன் பயணத்தை தொடங்கியவர் வையாபுரி. அதன்பின் விவேக் அவர்களின் துணையால் சினிமாவுக்குள் வந்த இவர் இளைய ராகம் என்ற படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் தன் நகைச்சுவை உணர்வால் மக்களை ஈர்த்தார். விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் திருநங்கை வேடத்தில் வந்த இவர் மக்களின் பாராட்டை பெற்றார். பின் பிக் பாஸ் சீசன் 1 இல் பங்கேற்ற இவருக்கு சினிமாவில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருப்பது மக்களை வேதனை படுத்துகிறது.

Also Read:கவுண்டமணியின் டைமிங்கை கச்சிதமாய் பிடிக்கும் 5 நடிகர்கள்.. கெமிஸ்ட்ரியில் பின்னி பெடலெடுத்த விஜய்

தாமு: இவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். சன் டிவியில் கலக்கல் காமெடி என்னும் நிகழ்ச்சியை தொகுத்தும், அதன் பின் படிப்படியாக சினிமாவில் தன் பயணங்களை தொடங்கியவர். 2004ல் வந்த கில்லி படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரம் இவருக்கு மக்களிடையே நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் பிரபல நடிகர்களுடன் இணைந்து காமெடியிலும், டப்பிங்கிலும் கலக்கிய இவர் தற்போது சினிமாவில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வியை மக்களிடம் முன் வைக்கின்றது.

Trending News