சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டைரக்சனை விட நடிப்பில் கல்லா கட்டும் 6 பேர்.. ராஜமவுலியே டிக்கெட் போட்டு தூக்கிட்டு போன தரமான ஆக்டர்

6 Best directors turned actors:தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நடிகர்கள் படங்கள் இயக்குவது, இசையமைப்பாளர்கள் பாட்டு பாடுவது, காமெடி நடிகர்கள் வில்லனாக நடிப்பது என எல்லாமே மாறிவிட்டது. ஒரு சில இயக்குனர்கள் நடிகர்களாக அவதாரம் எடுத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள். நீங்கள் படம் இயக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை இது போன்ற படங்களில் நடித்தாலே போதும் என ரசிகர்கள் ஒரு சில இயக்குனர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆறு இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

நடிப்பில் கல்லா கட்டும் 6 இயக்குனர்கள்

அமீர்: இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் அமீர் ஏற்று நடித்த ராஜன் கதாபாத்திரம் தான் இன்று வரை அவருடைய அடையாளமாக மாறிவிட்டது. அந்த படத்தில் அமீர் ராஜனாகவே வாழ்ந்திருப்பார். இன்று வரை அந்த ராஜன் கேரக்டரை மட்டும் வைத்து ஒரு முழு படம் எடுக்க வேண்டும் என்பது வெற்றிமாறன் ரசிகர்களின் வேண்டுகோளாகவே இருக்கிறது.

கௌதம் மேனன்: மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களின் மூலம் இளைஞர்களை காதலில் திளைக்க செய்த கௌதம் மேனன் தான் வேட்டையாடு விளையாடு மற்றும் காக்க காக்க போன்ற அதிரடி படங்களையும் இயக்கியவர். அதே நேரத்தில் சமீப காலமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள், அட! தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான கலைஞன் வந்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கிறது. கௌதம் மேனனின் வித்தியாசமான நடிப்பு மற்றும் குரல் அவருக்கு மிகப்பெரிய பிளஸ்.

Also Read:சசிகுமாரை வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்.. இவருடன் நடிச்ச சூரி-க்கு இப்படி ஒரு நல்ல நேரமா?

லாரன்ஸ்: நடன இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோ, இயக்குனர் என கலக்கியவர் தான் ராகவா லாரன்ஸ். அவருடைய இயக்கத்தில் முனி, காஞ்சனா சீரிஸ் போன்ற படங்கள் இன்று வரை குழந்தைகளின் பேவரட் லிஸ்டில் இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்து வந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் அவரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

எஸ் ஜே சூர்யா: இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஆரம்ப காலங்களில் அவருடைய சொந்த இயக்கத்தில் நடிக்கும் போது கூட இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் மற்ற இயக்குனர்கள் கொடுத்த கேரக்டர்கள், அதை அவர் நடித்த விதம் இப்போது நடிப்பு அரக்கன் என பெயர் வாங்கும் அளவுக்கு இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்போதைக்கு வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண இவரை விட்டால் ஆள் இல்லை என்ற நிலைமையில் தான் இருக்கிறது.

சமுத்திரக்கனி: இயக்குனர் சமுத்திரக்கனிக்கு நடிப்பில் புதிய பரிமாணத்தை கொடுத்தது தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் தான். இதை தொடர்ந்து நிறைய நல்ல கேரக்டர்களின் நடித்து வந்த சமுத்திரகனிக்கு இயக்குனர் ராஜமவுலி ஆர்ஆர் ஆர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதன் பின்னர் தெலுங்கு சினிமா சமுத்திரகனியை கொண்டாட ஆரம்பித்துவிட்டது. இப்போது தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் பிஸியாகிவிட்டார் சமுத்திரகனி.

Also Read:ஓடிடி என்ட்ரியில் பல்பு வாங்கிய 5 நடிகைகள்.. வெப் சீரிஸ் நடித்து மொக்கை வாங்கியது தான் மிச்சம்

Trending News