வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கார், பைக் என அள்ளிய 6 இயக்குனர்கள்.. சம்பளம் போக சைடு கேப்பில் சிந்து பாடும் லோகேஷ்

Successful Directors : திரைப்படத்துறையில் உடன் பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கார், பைக், செயின் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் அன்பின் வெளிப்பாடாகவும் மனநிறைவையும் கருதி இவ்வாறு பரிசளிக்கின்றனர். இவ்வாறு கார், பைக் என அள்ளிய சிலரை பற்றி பார்ப்போம்.

மாமன்னன் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகி உள்ள படம் மாமன்னன். ரிலீசான நாள் முதல் வசூல் சாதனை படைத்து வரும் இந்தப் படத்தால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் உதயநிதி மாரி செல்வராஜுக்கு மினி சூப்பர் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது இந்த படம். மூன்று நாட்களில் ரூபாய் 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் மகிழ்ச்சியில் உள்ளது. அந்த மகிழ்ச்சியின் காரணமாக மாரிசெல்வராஜீக்கு உதயநிதி ரூபாய் 50 லட்சம் மதிப்புடைய மினி சூப்பர் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

Also Read : அசல் அப்பாவின் ஜெராக்ஸ் ஆக கெளதம் மேனன்.. இணையத்தை கலக்கும் நிஜ வாரணம் ஆயிரம் போட்டோ

வெந்து தணிந்தது காடு : கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் வெந்து தணிந்தது காடு. கடந்த ஆண்டு வெளியாகி ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது இந்த படம். ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அதிக வசூல் ஈட்டியதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

விக்ரம் : ராஜ்கமல் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தயாரித்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த ஆக்ஷன் திரில்லர் படமான இந்த படத்தில் பகத் பசில், விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு பெரும் வசூலை ஈட்டியது. அதனால் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஆக லெக்ஸஸ் காரை பரிசாக வழங்கினார்.

Also Read : விக்ரம் படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களை லியோவில் இறக்கும் லோகேஷ்.. அப்போ LCU கன்பார்ம்

கோமாளி : டாக்டர் ஐசரி கணேஷ் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து ஜெயம் ரவி நடித்து வெளிவந்த படம் கோமாளி. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை ஈட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு ஆடம்பர ஹோண்டா சிட்டி காரை பரிசாக படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதனுக்கு பரிசாக வழங்கினார்.

தானா சேர்ந்த கூட்டம் : ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த படம் தானா சேர்ந்த கூட்டம். 2018 – ல் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸான இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு படத்தின் நாயகன் சூர்யா புத்தம் புதிய சிவப்பு நிற டொயோட்டா காரை பரிசாக வழங்கினார்.

சிங்கம் 3 : சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமும் S3 என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த மூன்று படங்களிலும் சூர்யாவையே கதையின் நாயகனாக நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் ஹரி. இந்தப் படத்தில் சுருதிஹாசன், அனுஷ்கா செட்டி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படி ஹீரோவாக தன்னையே மூன்று படங்களிலும் பயன்படுத்திக்கொண்டு இயக்கிய ஹரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை பரிசாக வழங்கினார் நடிகர் சூர்யா.

Also Read : சோடை போனதால் கொடுக்கிற சம்பளத்தை வாங்கி நடிக்கும் பரிதாபம்.. மறுபடியும் ஹரி கூட்டணியில் விஷால்

Trending News