வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2023ல் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த 6 இயக்குனர்கள்.. சிவாஜி பேத்தியவே வளைத்து போட்ட ஆதிக்

6 directors gave hits in 2023: இன்னும் சில தினங்களில் புத்தாண்டு துவங்க இருப்பதால் 2023 ஆம் ஆண்டில் திரையுலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு ஆறு இயக்குனர்கள் தரமான சம்பவங்களை செய்து இருக்கின்றனர். அதிலும் சிவாஜியின் பேத்தியவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வளைத்துப் போட்டது பலரையும் வாயடிக்க வைத்தது.

அருண்குமார்: விஜய் சேதுபதி வைத்து தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் எஸ் யூ அருண்குமார், இந்த வருடம் சித்தா என்ற அற்புதமான படைப்பை அளித்தார். இந்த படம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவர்ந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு எஸ் யூ அருண்குமார் அடுத்ததாக ‘சியான் 62’ படத்தை இயக்குவதாக அறிவிப்பும் வெளியானது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் விக்ரம் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார். வேட்டி சட்டை மீசையுடன் கிராமத்து கெட்டப்பில் விக்ரம் இதில் மிரட்டுகிறார். இதனால் 2023ல் சித்தா படத்தின் மூலம் தன்னை யார் என நிரூபித்த எஸ் யூ அருண்குமார், அடுத்து சியான் 62 படத்திலும் தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார்.

விநாயக் சந்திரசேகரன்: குறட்டை தானே என நாம் சாதாரணமாக கடந்து போகும் விசயம், ஒரு இளைஞரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பதை காட்டிய குட் நைட் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த படங்களில் குட் நைட் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த விநாயகர் சந்திரசேகருக்கு டாப் நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிகிறது. அதிலும் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் விநாயக் சந்திரசேகர் இணைகிறார்.

Also Read: கல்யாணம் மட்டும் சிம்பிளா.? மாப்பிள்ளை ஆதித்க்கு பிரபு கொடுத்த வரதட்சணை என்ன தெரியுமா.?

விக்னேஷ் ராஜா: இந்த வருடம் வெளியான படங்களில் எல்லாரையும் மிரட்டிவிட்ட கிரைம் திரில்லர் படம் தான் போர் தொழில். இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா அறிமுகமான முதல் படத்திலேயே அடிச்சு நவத்தி விட்டுட்டார் இந்த படத்திற்குப் பிறகு இவருடைய அடுத்த படமும் திரில்லர் படமாக தான் இருக்கும் என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

2023ல் திரும்பி பார்க்க வைத்த 6 இயக்குனர்கள்

மந்திர மூர்த்தி: சசிகுமார் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் இந்த வருடம் வெளியான படம் தான் அயோத்தி. 2023ல் வெளியான சிறந்த படங்களில் அயோத்தியும் ஒன்று. இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்தது. முதல் படத்திலேயே பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த மந்திர மூர்த்தி அடுத்து ராகவா லாரன்ஸை வைத்து இயக்கப்போவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

ராம்குமார் பாலகிருஷ்ணன்: ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் பார்க்கிங். இந்த படத்தில் இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன்,  ஈகோ என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப்போட்டுகிறது என்பதை சிறப்பாக எழுதி இயக்கினார். தியேட்டரில் இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இவர் இயக்கும் அடுத்த படத்தை குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் தற்போது அதிகரித்து இருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன்: ‘திரிஷா இல்ல நயன்தாரா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அதன் பின் ஒரு சில படங்களை இயக்கினார். இருப்பினும் அவருக்கு 2023 ஆம் ஆண்டில் விஷாலை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு அஜித்தின் ஏகே 63 படத்தையும் இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல சினிமாவில் மூன்று தலைமுறைகளாக கொடி கட்டி பறக்கும் சிவாஜியின் பேத்தியவே சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு வரதட்சணையாக நகை மற்றும் சொகுசு பங்களா மட்டுமல்ல பல கோடிகளையும் பிரபு தனது சொத்தில் இருந்து ஆதி ரவிச்சந்திரனுக்கு கொடுத்திருக்கிறார்.

Also Read: ஆசை அறுவது மோகம் 30 என பிரிந்த 5 ஜோடிகள்.. லிவிங் டுகெதர் வாழ்க்கையை வெறுத்துப் போன நடிகைகள்

Trending News