புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஹீரோக்களை சாகடிக்கும் 6 இயக்குனர்கள்.. பாலா படமே வேண்டாம் என ஒதுங்கும் நிலைமை

Tamil Movie Directors: நடிகர்கள், சில இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் ரொம்பவே விரும்பி நடிப்பார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்களிடம் சிக்கி விடவே கூடாது என நடிகர்கள் பயந்து ஒதுங்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஒரு சில இயக்குனர்களின் படங்களின் அடிப்பது என்பது தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நிலைமை தான். அவர்கள் நினைக்கும் அளவுக்கு காட்சிகள் வரும் வரை நடிப்பவர்களை வச்சு செய்து விடுவார்கள். இந்த ஆறு இயக்குனர்கள் எல்லா படத்திலேயும் தங்கள் ஹீரோக்களை படாத பாடு படுத்தி இருக்கிறார்கள்.

பாலா: இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் இயக்குனர் பாலா. இவருடைய படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அழகாக காட்டப்பட்டதாக இதுவரை சரித்திரமே இல்லை. எதார்த்தமாக காட்சிகள் எடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களை டார்ச்சர் செய்து பின்னி பெடல் எடுத்து விடுவார். இவரின் படங்களுக்குப் பிறகு அந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு நல்ல அடையாளம் கிடைத்தாலும், படப்பிடிப்பில் அவர்கள் படும் கஷ்டங்கள் என்பது ரொம்பவே அதிகம்.

Also Read:ஹீரோவாக நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்.. ரஜினியின் படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற நடிகர்

மிஷ்கின்: இயக்குனர் மிஷ்கின் எப்படி பேசுவார் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் வரை தெரிந்த விஷயம் தான். அதிலும் படம் இயக்குவது என வந்துவிட்டால் அவரிடம் மாட்டிக் கொள்பவர்கள் மொத்தமாக வாழ்க்கையே வெறுத்து விடுவார்கள். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் தன்னுடைய படத்தின் ஒரு காட்சிக்காக கண்ணாடி பாட்டிலை ஒரு நடிகரின் தலையில் உண்மையாகவே அடித்து உடைத்ததாகவும், அந்த அளவுக்கு அவர் அர்ப்பணித்து நடித்ததாகவும் சொல்லியிருந்தார்.

வெற்றிமாறன்: இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் என்றாலே கண்டிப்பாக தேசிய விருது என்பது உறுதி. அதே நேரத்தில் வேலை செய்வது என்பது தான் ரொம்பவே கஷ்டம். அவர் எப்படி நினைக்கிறாரோ அதே மாதிரி ஹீரோக்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுபவர். சமீபத்தில் கூட விடுதலை படத்திற்காக மொத்த குழுவையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று ரொம்பவே டார்ச்சர் செய்திருக்கிறார்.

செல்வராகவன்: இயக்குனர் செல்வராகவனின் படங்களில் நடிப்பது என்பது ரொம்பவே கஷ்டம் என சொல்லாத நடிகர்களை. இவர் ஒரு காட்சியில் எத்தனை முறை கண் சிமிட்ட வேண்டும் என்பது முதற்கொண்டு அளவு வைத்து தான் நடிக்க வைப்பாராம். அதிலும் துள்ளுவதோ இளமை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷ் இவரிடம் அடி கூட வாங்கி இருக்கிறாராம்.

Also Read:பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் கொடுத்த ஜெயிலர் ரிவ்யூ.. பத்திரிக்கையாளர் ஷோவில் நடந்த கலாட்டா

ஹரி: இயக்குனர் ஹரி கிராமத்து கதை களம் கொண்ட படங்கள் எடுப்பதில் ரொம்பவே திறமையானவர். அதே நேரத்தில் இவருடைய படங்களில் ஏகத்துக்கும் பஞ்ச் வசனங்கள் இருக்கும். நடிகர்கள் இந்த வசனங்களை பேசி, டப்பிங் செய்து முடிப்பதற்குள் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பார்கள்.

T.R ராஜேந்தர்: இயக்குனர் மற்றும் நடிகர் ராஜேந்தர் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமானவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். படம் இயக்குவதிலும் அவர் அப்படித்தான். சமீபத்தில் நடிகர் சந்தானம் கொடுத்த பேட்டியில் கூட ஒரு படத்தின் ஹீரோ சரியாக நடிக்கவில்லை என்பதற்காக நீச்சல் குளத்தின் அந்த பக்கத்தில் நின்றிருந்த ஹீரோவிடம் செல்ல பட்டென குளத்தில் குதித்து நீச்சல் அடித்தே சென்றாராம். அந்த அளவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் போல் படங்களை இயக்கியிருக்கிறார்.

Also Read:ரஜினியையே ஆட்டம் காண வைத்த மலையாள நடிகர்.. ஜெயிலரில் ஸ்கோர் செய்த ஒத்த சிங்கம்

Trending News