வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

90களில் வில்லத்தனத்தில் மிரட்டிய 6 சீரியல் நடிகைகள்.. ரீ என்ட்ரியில் சம்பவம் செய்த நளினி

Serial: 90களில் ஒளிபரப்பான சீரியல்கள் எப்போதுமே நேயர்களுக்கு விருப்பம் தான். அதனால் தான் இன்று வரை சமூக வலைத்தளங்களில் இந்த சீரியலை ரீடெலிகாஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இந்த சீரியல்களில் வரும் வில்லி நடிகைகள் மக்களிடம் அதிகமாக திட்டு வாங்கி இருப்பார்கள்.

அதற்கு காரணம் அவர்கள் ஒரிஜினலாகவே வில்லத்தனத்தில் மிரட்டியதுதான். அப்படிப்பட்ட ஆறு நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

நளினி: சினிமாவை விட்டு பல வருடங்கள் ஒதுங்கி இருந்த நளினியை மீண்டும் மக்களிடையே சேர்த்தது கிருஷ்ண தாசி சீரியல்தான்.

இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் மிரட்டி இருப்பார். அதைத் தொடர்ந்து கோலங்கள் அபி கேரக்டரில் நடித்த தேவயானிக்கு மாமியாராக மொத்த வில்லத்தனத்தையும் இறக்கி இருப்பார்.

சாந்தி வில்லியம்ஸ்: சன் டிவியின் ஆஸ்தான வில்லிகளில் ஒருவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் மெட்டிஒலி நாடகத்தில் நடித்த ராஜா கேரக்டரை தமிழ்நாட்டில் திட்டாத பெண்களே இல்லை என்று சொல்லலாம்.

கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாக சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

கௌதமி வேம்பு நாதன்: 90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய சீரியல் திருமதி செல்வம். இதில் கௌதமி வேம்பு நாதன் பாக்கியம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

செல்வத்தின் சித்தியாக வரும் இவர் அப்போதைய காலகட்டத்தில் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்கள்.

ரேகா கிருஷ்ணப்பா: நடிகை வாணி போஜன் கதாநாயகி ஆக நடித்த தெய்வமகள் சீரியல் ஒரு காலகட்டத்தில் சன் டிவியில் சட்டை போடு போட்டது.

இதில் நடிகை ரேகா காயத்ரி என்னும் வில்லி கேரக்டரில் நடித்திருப்பார். பிரகாஷ் இவரை அண்ணியாரேஎன்று கூப்பிடுவது பெரிய அளவில் வைரலானது.

யுவராணி: நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக அறிமுகமாகியவர் யுவராணி. ஆனால் இவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது சித்தி சீரியல் தான்.

பிரபாவதி கிருஷ்ணன் என்னும் பெயரில் இந்த சீரியலில் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.

பிருந்தா தாஸ்: வில்லத்தனத்தில் தனித்தன்மையை காட்டியவர் நடிகை பிருந்தா தாஸ். ஆனந்தம் சீரியலில் இப்படி ஒரு அடக்கமான மருமகளா என ஆரம்பத்தில் எல்லோரும் வியந்து காத்திருப்பார்கள்.

ஆனால் நாசுக்காக இவர் செய்யும் வில்லத்தனம் பிரமிக்க வைத்திருக்கும்.

Trending News