வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

3 வேடங்களில் டாப் ஹீரோக்கள் பின்னி பெடலெடுத்த 6 படங்கள்.. மெர்சலாக்கிய தளபதி விஜய்

டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கெட்டப்பில் ஒரே படத்தில் நடித்து பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள். அதிலும் தளபதி விஜய் மெர்சல் படத்தில் மெர்சல் ஆக 3 வேடங்களில் நடித்து அசத்தினார்.

மூன்று முகம்: 1982 ஆம்ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். இதில் ரஜினிகாந்த் அலெக்ஸ் பாண்டியன், ஜோன், அருண் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருப்பார். இந்த மூன்று கெட்டப்பிலும் சிறப்பாக நடித்த காரணத்தினால் ரஜினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி இப்படம் 250 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அபூர்வ சகோதர்கள்: 1989 ஆம் ஆண்டு சங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான கமல் 3 வேடத்தில் நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். சேதுபதி, ராஜா, அப்பு உள்ளிட்ட மூன்று வேடங்களில் நடித்த கமலஹாசனுடன் ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இப்படத்திற்கு உயிரூட்டி இருப்பர்.

இவர் நடித்த அப்பு கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினையும் பெற்றுள்ளார்.

Also Read: வாரிசு படத்திற்கு கும்பிடு போட்ட விஜய்.. தடபுடலாக ஆரம்பமாகும் தளபதி 67

வரலாறு: 2006 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் அப்பா, 2 மகன் உட்பட மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். இந்த மூன்று கெட்டப்பிலும் அஜித் தன்னுடைய வித்தியாச வித்தியாசமான மாற்றத்தை நடிப்பில் வெளிகட்டி இருப்பார். இப்படம் அஜித் நடிப்பில் வெளியான 2002ல் வெளியான வில்லன் பட சாதனையை முறியடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்து இருப்பது மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது.

மெர்சல்: 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் முதன் முதலில் மூன்று வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு ஊருக்கு மருத்துவமனை எவ்வளவு அவசியம் என்பதை தனது நடிப்பு திறமையின் மூலம் படத்தில் தெளிவாக உணர்த்தி இருப்பார். இதில் விஜயுடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இப்படத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர்.

Also Read: டாப் ஹீரோக்கள் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்த 6 படங்கள்.. நானே வருவேன் படத்தில் மிரட்டிய தனுஷ்

24:  2016 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், ருத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூர்யா மூன்று கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். இதில் அப்பா மகனாகவும் தோற்றத்தில் மாற்றம் காட்டி இருக்கும் சூர்யா மூன்றாவது வேடத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

அனேகன்: தனுஷ் நடிப்பில் இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அனேகன் திரைப்படத்தில் தனுஷ் மாறுபட்ட வேடங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனுஷுடன் அமைரா தாஸ் தூர், கார்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷிற்கு கார்த்திக் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு நடுவே நடக்கும் காதலை அனைத்து காலத்திற்கும் ஏற்றார்போல அழகாக காட்டி இருப்பார்கள்.

Also Read: ஸ்கூல் பையனாக நடித்து அசத்திய 5 ஹீரோக்கள்.. தொட்டிலில் போட்டா கூட செட்டாகும் தனுஷ்

இருமுகன்: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. விக்ரமுக்கு ஜோடியாக லேடி சூப்பர் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் மூன்று வேடங்களில் விக்ரம் நடித்திருப்பார். அதிலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் திருநங்கையாக தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்திருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இவ்வாறு இந்த 6 படங்களிலும் டாப் ஹீரோக்கள் மூன்று வேடங்களில் நடித்து திரை முழுவதும் பிரகாசமாக சென்று இருப்பார்கள். அதிலும் தளபதி விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் மெர்சல் படத்தில் மெர்சல் ஆக்கி விட்டிருப்பார்.

Trending News