திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கருணாஸ் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய 6 படங்கள்.. தன்னை அடையாளப்படுத்த போராடிய பச்சமுத்து

Actors Karunas: கருணாஸ் காமெடியனாக நுழைந்து பல படங்களில் இவருடைய திறமையை நிரூபிக்கும் வகையில் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டி நடித்திருப்பார். அத்துடன் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மேலும் இந்த கதாபாத்திரங்கள் இவரை தவிர வேறு யார் நடித்தாலும் செட்டாகாது என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டி இருப்பார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

நந்தா: இயக்குனர் பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, லைலா, ராஜ்கிரன், கருணாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் தான் கருணாஸ் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் அறிமுகமானார். ஆனால் இவர் அறிமுகமான முதல் படத்திலேயே புதுமுக நடிகர் என்று நினைக்கும் படியாக இருக்காது. அந்த அளவிற்கு இவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தை காமெடியனாகவும், நக்கல் கலந்த நகைச்சுவையாகவும் வெளிக்காட்டி இருப்பார்.

Also read: சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

தேவதையை கண்டேன்: பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு தேவதை கண்டேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ஸ்ரீதேவி, குணால், கருணாஸ், சத்யன், மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தனுசுக்கு ஒரு நண்பராக இருந்து அவருக்கு நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லும் கேரக்டரில் நடித்திருப்பார். அத்துடன் ஸ்ரீதேவிக்கு ரூட் விட்டு ஜொள்ளு காமெடியனாகவும் நடித்திருக்கிறார்.

திண்டுக்கல் சாரதி: சிவா சண்முகன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளிவந்தது. இதில் கருணாஸ், கார்த்திகா, சரண்யா, நாசர், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கருணாஸ் சாரதி என்ற ஒரு கேரக்டரில் ரொம்பவே வெள்ளந்தியாகவும் அதே நேரத்தில் சிக்கனமாகவும் குடும்பத்தை நடத்தி வருவார். இப்படத்தில் இவரை தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வெற்றியை பார்த்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக வாழ்ந்து காட்டி இருப்பார்.

Also read: சிம்ரனுடன் நடிக்க மறுத்த கருணாஸ்.. உங்களுக்கே இது ஓவரா தெரியல!

சூரரைப் போற்று: சுதா கொங்கரா இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு சூரரை போற்றி திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, அபர்ணா, மோகன்பாபு, ஊர்வசி மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஒரு காமெடியனாகவும், சப்போர்ட்டிங் கேரக்டராகவும் இவருடைய நடிப்பு பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு நடித்துக் காட்டி இருப்பார்.

கட்டாகுஸ்தி: செல்ல அய்யாவு இயக்கத்தில் கடந்த வருடம் கட்டா குஸ்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஸ்கான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு மாமாவாக நடித்து பெண்களை அதிகாரம் பண்ணிக்கொண்டு வாழ்வதுதான் கௌரவம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதில் இவருடைய கேரக்டர் எதிர்நீச்சல் குணசேகரன் போல் கொஞ்சம் வந்துட்டு போகிற மாதிரி இருக்கும்.

ஆதார்: ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த வருடம் ஆதார் திரைப்படம் வெளிவந்தது. இதில் கருணாஸ், அருண் பாண்டியன், உமர ரியாஸ்கான், ரித்விகா, இனியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு மர்ம கதையை திரில்லர் படமாக கொண்டு வந்து சேர்த்திருக்கும். இப்படத்தில் தன்னுடைய அடையாளத்தை மேம்படுத்தி காட்டுவதற்காக போராடும் பச்சமுத்து கேரக்டரில் கருணாஸ் நடித்திருப்பார்.

Also read: 2வது மனைவியாக கழுத்து நீட்டிய 5 நடிகைகள்.. அந்தரங்க உறவால் முறிந்த விஷ்ணு விஷால் திருமணம்

Trending News