Actor Raguvaran: ரகுவரன் என்றாலே வில்லத்தனம் இருக்கும் என்பதற்கு ஏற்ப இவருடைய நடிப்பையும் யாராலயும் மிஞ்சிட முடியாது என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதில் தற்போது ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
லவ் டுடே: பாலசேகரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு லவ் டுடே திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரகுவரன், விஜய்யின் அப்பாவாக டாக்டர் சந்திரசேகர் என்ற கேரக்டரில் ஒரு நண்பர் போல சகஜமாக பழகக் கூடிய தந்தையாக நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்று 175 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.
Also read: ரகுவரன் ஹீரோவாக முத்திரை பதித்த 5 படங்கள்.. கதாபாத்திரத்திற்காக பழகிய கேடுகெட்ட பழக்கம்
முகவரி: VZ துரை இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு முகவரி திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், ஜோதிகா, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித்துக்கு ஒரு நல்ல அண்ணனாக நடித்து குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷத்துக்காக உழைக்கும் ஒரு பொறுப்பான கேரக்டரில் நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
உயிரிலே கலந்தது: கே ஆர் ஜெயா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு உயிரிலே கலந்தது திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, ஜோதிகா, ரகுவரன், சிவகுமார், ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யாவின் மூத்த சகோதரராக ரகுவரன் நடித்திருப்பார். அதே நேரத்தில் அப்பா அம்மாவின் பாசங்கள் அனைத்தும் தன்னுடைய தம்பிக்கு முழுமையாக கிடைக்கிறது என்ற பொறாமையில் பல தவறுகளை செய்து அதன் பின் வருந்தும் கேரக்டரில் இவருடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
Also read: தடுக்கி விழுந்த 5 நடிகர்களை தூக்கி விட்ட சூப்பர் ஸ்டார்.. வில்லனாய் தெறிக்கவிட்ட ரகுவரன்
உல்லாசம்: ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு உல்லாசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், விக்ரம், மகேஸ்வரி, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரகுவரன் விக்ரமின் அப்பாவாக நடித்திருப்பார். இதில் இவருடைய கேரக்டர் ஒரு கரடுமுடான தாதாவாக இருக்கும். ஆனால் இவருடைய மகன் விக்ரம் ரொம்பவே சாப்ட்டாக வளருவார். அதற்கு எதிர் மாறாக அஜித் ரகுவரன் கேரக்டர் போலவே மாறிடுவார்.
யாரடி நீ மோகினி: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு யாரடி நீ மோகினி திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், கார்த்திக் குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷின் அப்பாவாக ரகுவரன் நடித்திருப்பார். இதில் எதார்த்தமான தந்தையாகவும், தன்னுடைய மகனின் வளர்ச்சியை நினைத்து பெருமைப்படக்கூடிய ஒரு அப்பாவாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும், பாக்ஸ் ஆபிஸில் அதிக வெற்றி பெற்றது.
பாட்ஷா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, நக்மா, ரகுவரன், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரகுவரன் மார்க் ஆண்டனி என்ற கேரக்டரில் ரஜினிக்கு சரியான வில்லன் என்ற பெயரை தற்போது வரை நிலைநாட்டி விட்டார். அந்த அளவிற்கு இப்படத்தில் ரகுவரன் நடிப்பு ரஜினிக்கு இணையாக பேசப்பட்டு வருகிறது. இதில் இவரை தவிர இந்த கேரக்டரில் வேற யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்காது, என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்தது ரகுவரனின் நடிப்பு தான். இப்படம் 15 மாதங்கள் திரையரங்குகளில் ஓடி மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது.