சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பெண் பிள்ளைகளுக்காக படம் எடுத்து, அப்பாக்களை அழ வைத்த 6 படங்கள்.. இதுல தூக்குதுரை ஒரு படி மேல!

Father- Girl Sentiment Movies: கதையில் பாசத்தை வெளிக்காட்டும் விதமாய் அமைந்த படங்கள் மக்களிடையே சென்டிமென்ட் ரீதியாய் வெற்றி கண்டு விடுகிறது. மேலும் இயக்குனர்களும் இது போன்ற கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் பெண் பிள்ளைகளுக்காக படம் எடுத்து, அப்பாக்களை அழவிட்ட 6 படங்களை பற்றி இங்கு காண்போம்.

விஸ்வாசம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட படம் தான் விஸ்வாசம். இப்படத்தில் அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தான் பெற்ற மகளின் பிரிவை தாங்காமல் மகளுக்கே சேவை செய்யும் சிறந்த தந்தையாய் தூக்குதுரை கதாபாத்திரத்தில் அஜித் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். அவை சென்டிமென்ட் ரீதியாய் வேற லெவலில் பேசப்பட்டது.

Also Read: ஓடிடி ரிலீஸ் பற்றி யோசிக்கவே நேரமில்லை.. தியேட்டரிலேயே கோடிக்கணக்கில் கல்லா கட்டும் படம்

தெய்வதிருமகள்: மனநிலை குன்றிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து, மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட படம் தான் தெய்வத்திருமகள். இப்படத்தில் மகளின் பிரிவினை தாங்க முடியாமல் அவளை மீட்க படாதபாடு படும் விக்ரமின் உன்னதமான நடிப்பு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

அபியும் நானும்: பிரகாஷ் ராஜ் தன் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் அபியும் நானும். பருவத்திற்கு வரும் பெண் பிள்ளைகளின் பிரிவை வெளிப்படுத்தும் விதமாய் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் பிரகாஷ்ராஜ் த்ரிஷா இணைந்து வெளிக்காட்டிய பாசம் பல தந்தைகளை அழ வைத்தது என்றே கூறலாம்.

Also Read: சோத்துலையும் அடிபட்டாச்சு, சேத்துலையும் அடிப்படனுமா?. ஜெயிலரால் வெளிநாடு புறப்பட்ட விஜய்

பேரன்பு: ராம் இயக்கத்தில் 2018ல் வெளிவந்த படம் தான் பேரன்பு. இப்படத்தில் மம்முட்டி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதபத்திரத்தில் நடித்திருப்பார்கள். தன் மனைவியின் பிரிவிற்கு பிறகு உடல்நிலை சரியில்லாத பெண் பிள்ளையை கண்காணித்து வரும் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

கன்னத்தில் முத்தமிட்டால்: சிம்ரன், மாதவன் நடிப்பில் வெற்றி கண்ட படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தையை தன் சொந்த மகளை போல் வளர்க்கும் தாய் தந்தையரின் பாசத்தை வெளிக்காட்டும் விதமாய் கதையை அமைந்திருக்கும். அதிலும் மாதவனின் நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: ஒட்டுமொத்த கதையும் ஓவர் டேக் செய்த குணசேகரனின் மகா நடிப்பு.. தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் ஜீவானந்தம்

தங்க மீன்கள்: 2013ல் வெளிவந்த இப்படத்தில் பேபி சாதனா, ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் தன் மகள் விரும்பும் அனைத்தையும் செய்து கொடுக்க முயலும் சிறந்த தந்தையாய் ராம் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Trending News