காமெடி சப்போர்ட்டிங் ரோலில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் தான் கிங்காங். இவரின் நிஜ பெயர் சங்கர். சினிமாவிற்காக பெயர் மாற்றம் பெற்று, தன்னை நகைச்சுவை கலைஞனாக அங்கீகரித்துக் கொண்டவர். ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதை போல இவரின் முயற்சி பெரியதளவு பேச வைத்தது.
இவரின் எண்ணற்ற படங்களில் நகைச்சுவை பிரபலமான வடிவேலு உடன் நடித்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இவர் ரஜினி போல நடிக்கும் ஸ்டைலும் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். அவ்வாறு இவரும் வடிவேலும் இணைந்து கலக்கிய நகைச்சுவைகள் இடம் பெற்ற 6 படங்களை பற்றி இங்கு காணலாம்.
Also Read: வடிவேலுவினால் சீரழிந்த 6 நடிகைகளின் வாழ்க்கை.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்
கந்தசாமி: 2009ல் சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விக்ரம், வடிவேலு, பிரபு, கிங்காங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இதில் கிங்காங்-வடிவேலு காமெடிகள் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். அதிலும் குறிப்பாக திருடனாய் வரும் கிங்காங்கை, வடிவேலு தம்பி யாருப்பா நீ என கேட்கும் காமெடி. மேலும் தன்னை திருடன் என்று சொல்லாமல் திருடர் என்று சொல்ல வேண்டும் எனக் கூறும் கிங்காங்கின் காமெடிகள் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு: 2008ல் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பூர்ணா, வடிவேலு, பரத், கிங்காங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் சாமியாராக களம் இறங்கி இருப்பார் வடிவேலு. மேலும் கூடுதல் சிறப்பாக கிங்காங் வடிவேலு உடன் எழுப்பும் காமெடிகள் சிறப்புற அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக இப்படி விபூதி அடிச்சே என் கண்ணு இப்படி ஆயிடுச்சு என கிங்காங் கூறும் காமெடி கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
Also Read: ஓவர் அலப்பறை கொடுத்து சுற்றி கொண்டிருந்த வடிவேலு.. மாமன்னனில் அடக்கி வாசிக்க காரணம் இதுதான்!
போக்கிரி: 2007ல் விஜய்யின் நடிப்பில் ஹிட் கொடுத்த படம் தான் போக்கிரி. இதில் பாடி சோடாவாக இடம் பெற்றிருப்பார் வடிவேலு. மேலும் லாரி டிரைவராக கிங்காங் வடிவேலுவுடன் எழுப்பும் காமெடி வயிறு குலுங்க வைக்கும் விதமாக அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக கிங்காங்கின் அசத்தலான பேச்சு வேற லெவலில் இருக்கும்.
பிறகு: 2007ல் வெளிவந்த இப்படத்தில் வடிவேலு பிணம் எரிப்பவர் போல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு உதவி புரியும் பணியில் கிங்காங் இடம் பெற்றிருப்பார். மேலும் இவர் வடிவேலுவை நீ எல்லாம் ஒரு மனுஷனாயா என மிரட்டுவது போன்று அமைந்த நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.
Also Read: கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 5 படங்கள்.. இன்றுவரை பிரபலமாக இருக்கும் ‘பத்தவச்சுட்டியே பரட்டை’ வசனம்
சுறா: 2010ல் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த படம் தான் சுறா. இதில் நகைச்சுவை நடிகராக வடிவேலு, கிங்காங் ஆகியோர் நடித்திருப்பார்கள். அதுவும் வதந்தியை நம்பி கிங்காங் மண்ணுளி பாம்பை பிடித்து கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதைப் போல மரவட்டையை பிடித்து தரும் காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார். மேலும் போலீஸ் உடையில் இவர் வரும் நகைச்சுவை காட்சிகளும் கூடுதல் சிறப்பை பெற்று தந்தது.
தெனாலிராமன்: 2017ல் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த இப்படத்தில் வடிவேலு சிறப்புற நடித்திருப்பார். இது புராண கதை என்பதால் அதற்கு ஏற்ற உடையில் இவர்கள் இடம் பெறும் காட்சிகள் மேலும் சிறப்பை பெற்று தந்திருக்கும். அதை தொடர்ந்து கிங்காங்- வடிவேலு இவர்கள் இருவரின் காம்பினேஷனில் இடம்பெறும் நகைச்சுவைகள் மக்களை வெகுவாக கவர்ந்தது.
Also Read: கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 5 படங்கள்.. இன்றுவரை பிரபலமாக இருக்கும் ‘பத்தவச்சுட்டியே பரட்டை’ வசனம்