வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்கள்.. சிவாஜியை மிரள விட்ட தலைவி

அரசியலிலும் சினிமாவிலும் அயன் லேடி ஆக பார்க்கப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பெரும்பாலான படங்களில் எம்ஜிஆர் உடன் ஜோடி சேர்ந்து, அவரின் பிரதானமான நடிகையாகவே மாறினார். அவரை தவிர்த்து சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் போன்றோருடனும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை தொட்டவர். இவர் தனக்கே உரித்தான திமிருடன் நடித்து கலக்கிய 6 படங்களைப் பற்றி பார்ப்போம்.

ஆயிரத்தில் ஒருவன்: 1965 ஆம் ஆண்டு பி ஆர் பந்துலு இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் நெய்தல் நாட்டு மருத்துவராக மணிமாறன் என்ற கதாபாத்திரத்தில், எம்ஜிஆர் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார். அதை போல் கன்னித்தீவு நாட்டு இளவரசி பூங்கொடியாக ஜெயலலிதா, அழகு ததும்பிய மங்கையாக நடித்து ரசிகர்களை வசியம் செய்திருப்பார். அதிலும் இதில் இளவரசியான ஜெயலலிதா செம கெத்தான தோற்றத்தில் படம் முழுக்க மாஸ் காட்டி அடி தூள் கிளப்பினார்.

யார் நீ: 1966 ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ஜெயலலிதா ஜோடி சேர்ந்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா தனக்கே உரித்தான கெத்தான தோற்றத்தில் நடித்து ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றார்.

Also Read: கிளாமரான பாடலுக்கு பிள்ளையார் சுழி போட்ட எம்ஜிஆரின் 5 படங்கள்.. பட்டையை கிளப்பிய உலகம் சுற்றும் வாலிபன்

குமரிப்பெண்: 1966 ஆம் ஆண்டு டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ஜெயலலிதா தனது கெத்து குறையாமல் தனக்கே உண்டான திமிரு தனதுடன் நடித்திருந்தது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

புதிய பூமி: 1968 ஆம் ஆண்டு சாணக்யா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் எவர்கிரீன் ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்து நடித்திருப்பார்கள். இதில் மருத்துவர் கதிரவன் என்ற கேரக்டரில் எம்ஜிஆரும், கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் ஜெயலலிதாவும் நடித்திருப்பார். அதிலும் கண்ணம்மாவாக ஜெயலலிதா இந்த படத்தில் காட்டிய கெத்து எம்ஜிஆரின் நடிப்பையை ஓவர்டேக் செய்யும் வகையில் இருந்தது.

Also Read: பிரியாணி விருந்தில் வந்த தீராத பகை.. 14 வருடமாக ஜெயலலிதா, விஜய்யை வெறுத்து ஒதுக்கிய ரகசியம்

குடியிருந்த கோவில்: 1968 ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி சேர்ந்திருப்பார்கள். இதில் ஆனந்த் மற்றும் பாபு உள்ளிட்ட இரண்டு கேரக்டரில் எம்ஜிஆர் நடித்துள்ளார். அதேபோல் ஜெயா என்ற கேரக்டரில் ஆனந்தனின் காதலியாகவும் ஜெயலலிதா தனது மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

பட்டிக்காடா பட்டணமா: 1972 ஆம் ஆண்டு பி மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சுபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சிவாஜியை கல்யாணம் செய்து கொண்டு ஜெயலலிதா அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது. அந்த அளவிற்கு இந்த படத்தில் தலைவி சிவாஜியை மிரட்டி விட்டிருப்பார்.

Also Read: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் சாதித்து காட்டிய 6 பிரபலங்கள்.. சிங்கப் பெண்ணாக கர்ஜித்த ஜெயலலிதா

இவ்வாறு இந்த 6 படங்களில் தான் ஜெயலலிதா தனது கெத்து குறையாமல் நடித்து மிரட்டி இருப்பார். அதிலும் பட்டிக்காடா பட்டணமா படத்தில் நடிகர் திலகத்தையே உருட்டி விட்ட தலைவியின் நடிப்பு பலரையும் ரசிக்க வைத்தது.

- Advertisement -spot_img

Trending News