திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

இயக்குனர் வெங்கட் பிரபு என்றாலே கதை வித்தியாசமாகவும் அவரது படங்களில் ஏதாவது ஒரு விறுவிறுப்பான கேரக்டரை கொடுப்பதுதான் அவருடைய படங்களில் இருக்கும் ஸ்பெஷல். அதிலும் அவர் இயக்கிய படங்களில் தன்னுடைய தம்பிக்கு முக்கியமான கேரக்டர் இல்லை என்றாலும் கூட தம்பி எப்படியாவது அதில் நடிக்க வேண்டும் என்று அவருக்காக ஒரு கதையை ரெடி பண்ணி அவர் இயக்கிய படங்கள் எல்லாம் நடிக்க வைத்திருப்பார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

சென்னை 600028: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய், சிவா, பிரேம்ஜி, நித்தின் சத்தியா, விஜய் வசந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இந்தியாவில் விளையாடப்படும் தெரு கிரிக்கெட் வீரர்களை மையமாக வைத்து கதை அமைந்திருக்கும். இப்படத்தில் பிரேம்ஜி, சீனு என்ற கேரக்டரில் நடித்தார். அதிலும் தன்னுடைய தம்பியின் கேரக்டர் கொஞ்சம் தூக்கலாக காமிக்க வேண்டும் என்று கடைசி வரை போடுகிற பாலை கேட்ச் புடிக்க தெரியாதவராக கைநழுவ விட்டு இது என்ன கொடுமை சார் என்ற டயலாக் மூலம் பிரேம்ஜியை ஃபேமஸ் ஆகிவிட்டார். இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வணிகரிதாகவும் வெற்றி படமாக ஆனது.

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் கிரிக்கெட் பந்தய பணத்தை கொள்ளை அடிப்பதை சுற்றி நான்கு திருடர்கள் கொண்ட கும்பலால் தூக்கப்படுவதை மையமாக வைத்து இருக்கும். இதில் பிரேம்ஜி ஹைலைட் பண்ணி காட்ட வேண்டும் என்பதற்காக கூடவே இருந்து கடைசியில் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துட்டு போகிற மாதிரி நடித்திருப்பார். இப்படம் அஜித்தின் 50-வது படம் அத்துடன் மிகப்பெரிய ஹிட் படமாக திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Also read: ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும்.. வெங்கட் பிரபுவின் கஸ்டடி ஆட்டம் ஆரம்பம்

கோவா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கோவா திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், டேனியல் சம்பத்ராஜ் மற்றும் பலர் நடித்தார்கள். இப்படத்தில் பிரேம்ஜி, சாமி கண்ணு என்ற கேரக்டரில் கோவில் பராமரிப்பாளர் அத்துடன் கொஞ்சம் பயந்து சுபாவத்துடன் நடித்தார். அத்துடன் இதில் இவருடைய கேரக்டர் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா ஆகவே அமைந்திருக்கும். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்தது.

பிரியாணி: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு பிரியாணி திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி மற்றும் நாசர் ஆகியோர் நடித்தார்கள். இதில் கார்த்தி மற்றும் பிரேம்ஜி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் பிரேம்ஜி ஆசைப்படும் பெண்ணை கார்த்தி சீக்கிரமாவே உஷார்ப்படுத்தும் விதமாகவும், அடுத்து இவர்கள் அறியாமலே ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து வெளி வருவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் அவர்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை கொடுக்கும் விதமாக பூர்த்தி அடைந்தது.

மாஸ் என்கிற மாசிலாமணி: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, நயன்தாரா, பார்த்திபன் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் பிரேம்ஜி, ஜெட்டு என்ற கேரக்டரில் விபத்தில் இருந்து பேயாக மாறி சூர்யாவின் சிறந்த நண்பராக நடித்திருப்பார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

Also read: லியோவை வைத்து கஸ்டடியை வியாபாரம் செய்யும் வெங்கட் பிரபு.. தல தப்புமா?

மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு மாநாடு திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சிம்புவின் தோழனாக பிரேம்ஜி நடித்திருப்பார். இப்படத்தில் பிரேம்ஜிக்கு முக்கிய கேரக்டரை கொடுத்திருப்பார். இதில் இவர் காதலிக்கும் பெண்ணை கல்யாணம் செய்யும்போது இவருக்கு ஏற்படும் சிக்கல்களில் இருந்து வரும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சனம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

கஸ்டடி: வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படம் வருகிற 12-ம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நாக சைதன்யா, அரவிந்த்சாமி, பிரீத்தி செட்டி, சரத்குமார், பிரேம்ஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தான் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம். அங்கேயும் தன்னுடைய தம்பி கேரக்டர் இருக்க வேண்டும் என்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

இப்படி தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது. அதே மாதிரி இந்த படங்களின் மூலம் தான் பிரேம்ஜியும் பரிச்சயமான நடிகராக மாறி இருக்கிறார்.

Also read: மீண்டும் மங்காத்தா ஆட வரும் வெங்கட் பிரபு.. கஸ்டடி படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இதுதான்!

Trending News