வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

படு மொக்க, தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட விஜய்யின் 6 படங்கள்.. ரத்த கண்ணீர் வர வைத்த சுறா

Actor Vijay Flop Movies: என்னதான் ரசிகர்களை சம்பாதித்து வைத்து முன்னணி நடிகராக இருந்தாலும் இவருடைய கேரியரில் ஏகப்பட்ட தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். அந்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக படும் மொக்கை வாங்கி இருக்கிறது. அத்துடன் இவருடைய சில படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டு மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

காவலன்: இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு காவலன் திரைப்படம் வெளிவந்தது இதில் விஜய், அசின், ராஜ்கிரண், ரோஜா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய், பாடிகார்ட் என்ற கேரக்டரில் பயங்கரமான நடிப்பை கொடுக்கிறேன் என்று மொத்தத்தையும் சொதப்பி நடித்திருப்பார். இப்படத்தில் விஜய்யின் எதார்த்தமான நடிப்பை கொடுக்க தவறி இருப்பார். இந்த கேரக்டருக்கு இவர் செட்டே ஆகாது என்று சொல்லும் அளவிற்கு மொக்கை வாங்கியது.

Also read: விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

வேலாயுதம்: மோகன் ராஜா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அண்ணன் தங்கையின் செண்டிமெண்டில் ஒரு நல்ல அண்ணனாகவும், அதே நேரத்தில் அநியாயத்திற்கு குரல் கொடுக்கும் கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் இந்த ரெண்டு கேரக்டருக்குமே இவர் செட் ஆகவில்லை என்று சொல்லும் அளவிற்கு இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

புலி: இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு புலி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் எப்பொழுதும் போல் விஜய்க்கு கமர்சியல் ஆக இல்லாமல் பேண்டஸி படமாக வெளிவந்தது. ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு இவருக்கு எதுக்கு வேண்டாத வேலை, இவருக்கு என்ன வருமோ அதை நடித்திருக்கலாம் என்று புலம்பும் படியான படமாக அமைந்து விட்டது.

Also read: கைவிட்ட விஜய் தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளியான அப்டேட்

வசீகரா: கே செல்வ பாரதி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வசீகரா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சினேகா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்தது. ஆனால் இதில் விஜய்யின் நடிப்பு மற்றும் படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதனாலயே இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.

உதயா: இயக்குனர் அழகம்பெருமாள் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு உதயா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சிம்ரன், விவேக், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படம் நீண்ட வருடமாக இழுவையில் இழுத்துக் கொண்டு அதன் பின்னே ஒரு முடிவுக்கு வந்து வெளியிடப்பட்டது. அதனாலயே மக்களுக்கு இப்படத்தின் மேலே இருந்த ஆர்வம் குறைந்து வணிக ரீதியாக தோல்வியை கொடுத்தது.

சுறா: எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சுறா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், தமன்னா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் விஜய்யின் 50-வது படமாகும். பொதுவாக முன்னணி நடிகர்கள் அவர்களுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்கும் போது ரொம்பவே கவனமாகவும் அந்த படம் மிகப்பெரிய ரீச் அடைய வேண்டும் என்று பார்த்து பார்த்து கதையை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தில் விஜய் உஷாராக இல்லாமல் தவற விட்டு விட்டார். மிகப்பெரிய தோல்வி படமாகவும் விஜய்யோட கேரியரில் கரும்புள்ளியாகவும் அமைந்துவிட்டது. இப்படத்தை தியேட்டர்களில் போய் பார்த்தவர்களுக்கு கண்ணில் இருந்து ரத்தக்கண்ணீர் தான் வடிந்தது.

Also read: ஜெயிலர் படத்தை ஒரு வழி பண்ணிட்டு தான் விடுவாங்க போல.. விஜய், அஜித் பேரை சொல்லி சுத்தலில் விடப்பட்ட நெல்சன்

Trending News