கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த கவுண்டமணி பொதுவாக செந்தில் உடன் நடித்து ரசிகர்களின் கைதட்டுகளை அள்ளியவர். ஆனால் இவர் ரஜினியுடன் சேர்ந்து 6 படங்களில் லூட்டி அடித்திருக்கிறார்.
16 வயதினிலே: 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் . இப்படத்தில் ஸ்ரீதேவி மயில் என்னும் கதாபாத்திரத்திலும், ரஜினி பரட்டை என்னும் கதாபாத்திரத்திலும், கமலஹாசன் சப்பானி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் ரஜினி மற்றும் கவுண்டமணி கூட்டணியில் உருவான கலக்கல் காமெடி அனைத்தும் ரசிப்பதாக அமைந்துள்ளது. இதில் கவுண்டமணி ரஜினி பாட்டு பத்த வச்சிட்டியே பரட்டை என்று சொல்லும் பேமஸ் டயலாக்கும் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. 175 நாட்கள் திரையில் ஓடி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
மன்னன்: 1986 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான அனுராகர அரளித்துவின் ரீமேக் ஆகும். பி வாசு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்,தி குஷ்பூ ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் கவுண்டமணி கூட்டணியில் உருவான ரசிகர் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது . இப்படம் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 25 வாரங்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸ் பிளாக் பாஸ்டர் ஆனது.
எஜமான்: 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்வி உதயகுமார் எழுதி இயக்கி இத்திரைப்படத்தில் திரைப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் வானவராயனாக நடித்துள்ளார் . கவுண்டமணி வெள்ளையங்கிரி என்னும் கதாபாத்திரத்தில் சலவை தொழிலாளியாக நடித்து தனது தனது நகைச்சுவை திறனை ரசிக்கும் வகையில் வெளிப்படுத்தி இருப்பார்.
Also Read: மறக்க முடியாத காக்கா ராதாகிருஷ்ணனின் 5 டாப் படங்கள்.. கமலை கண்கலங்க வைத்த மனுஷன்
மிஸ்டர் பாரத்: இத்திரைப்படம் திரிசூலின் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். 1986 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமலிங்கன் இயக்கிய இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி ஆகியோர் நடித்துள்ளனர். பரத் வேடத்தில் ரஜினிகாந்த்தும், கோபிநாத்தாக சத்யராஜும், உமாவாக அம்பிகாவும், சஞ்சீவி ஆக கவுண்டமணியும் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ் கவுண்டமணி காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆயிருக்கும்.
உழைப்பாளி: 199ல் பி வாசு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரோஜா, கவுண்டமணி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் கவுண்டமணி அடித்திருக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் இருக்கும் அதிலும் குறிப்பாக கவுண்டமணி தான் இந்தப் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வார்.
பாபா: 2002 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ரஜினி மற்றும் கவுண்டமணியின் கூட்டணியில் படம் முழுவதும் கலக்கல் காமெடிகளால் நிறைந்துள்ளன. அரசியல் ரீதியான கதைக்களத்தையும் காமெடி கலந்த கதைகளத்தையும் கொண்ட இத்திரைப்படம் வசூல் ரீதியில் தோல்வியை சந்தித்தது.
Also Read: சூப்பர் ஸ்டாருக்கு ஹிட் கொடுத்த சுந்தர் சி.. அடுத்தடுத்து மண்ணை கவ்விய 5 படங்கள்
இவ்வாறு இந்த 6 படங்களிலும் கவுண்டமணி தனது அல்டிமேட் நகைச்சுவை வெளிகாட்டி ரசிகர்களை திரையரங்கில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அதிலும் இவர் ரஜினியுடன் 16 வயதினிலே படத்தில் அடித்த லூட்டிக்கு அளவில்லாமல் போனது.