திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்தின் கேரியரை காலி செய்து ப்ளாப்பான 6 படங்கள்.. காசு போட்ட முதலாளி கூட இன்னொரு வாட்டி பாக்க மாட்டாங்க

Actor Ajith Failure Movies: நடிகர்களை பொருத்தவரை என்னதான் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்தாலும், அவர்கள் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். அதில் அஜித் நடித்த சில படங்கள் திரும்பி பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கும், இந்த படங்கள் அனைத்தும் இவருடைய கேரியரை காலி செய்யும் விதமாக பிளாப் ஆயிருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஜி: என் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ஜி திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், த்ரிஷா, மணிவண்ணன், விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வழக்கம்போல் காலம் காலமாக வந்த கதையே வைத்து பார்ப்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும் விதமாக மொக்கையாக இருக்கும். முக்கியமாக அஜித் ரசிகர்கள் இப்படிப்பட்ட ஒரு படத்தை இவரிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மோசமான விமர்சனத்தை பெற்றது.

Also read: அஜித்தை விட 10 மடங்கு அதிகமா பயமுறுத்தும் போலா ஷங்கர்.. சர்ச்சையை கிளப்பி, வாயை புண்ணாக்கிய இயக்குனர்

அசல்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு அசல் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், பிரபு, சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித், அப்பா மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆக்சன் மற்றும் குடும்ப சம்பந்தமாக கதையை வைத்திருக்கும். இந்த படம் அஜித்துக்கு செட் ஆகவில்லை என்று சொல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.

பரமசிவன்: பி வாசு இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு பரமசிவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், லைலா, ஜெயராம், விவேக் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஆக்ஷன் நிறைந்த படமாக இருந்தாலும், அஜித்திற்கு இது செட் ஆகவில்லை என்று சொல்லும் அளவிற்கு பிளாப்பான படமாக ஆனது. இப்படத்தை தயாரித்த முதலாளிகள் கூட திரும்ப பார்க்க மாட்டாங்க. அந்த அளவிற்கு படு மொக்கையாக இருக்கும்.

Also read: தக்‌ஷா டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம்.. நிஜ வாழ்க்கையிலும் சாணக்கியன் என உறுதி செய்த அஜித்

ஆஞ்சநேயா: என் மகராஜன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு ஆஞ்சநேயா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், மீரா ஜாஸ்மின், ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் ஏசிபி கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படி ஒரு படம் வந்துச்சா என்று கேட்கும் வகையில் அஜித் நடித்த படங்களிலேயே மிகத் தோல்வியான படமாக மாறிவிட்டது.

ஜனா: ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஜனா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், சினேகா, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மக்கள் எதிர்பார்த்தபடி சுவாரசியமும் இல்லை, அஜித்தை கைதட்டி கொண்டாடும் அளவிற்கு நடிப்பும் இல்லை என்று பலதரப்பட்ட கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

ஆழ்வார்: செல்ல அய்யாவு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ஆழ்வார் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அசின், விவேக், மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித், ஆழ்வார் மற்றும் சவக்கிடங்கு சிவனாக நடித்திருக்கிறார். ஆனால் இப்படம் அஜித்தின் சினிமா கேரியரை காலி செய்யும் அளவிற்கு படும் மட்டமான விமர்சனங்களை பெற்றது. வணிகரீதியாக சராசரி வருமானத்தை கூட பெறவில்லை.

Also read: ஒரு வழியா விடாமுயற்சிக்கு விடிவு காலம் பிறந்தாச்சு.. ஹீரோயினை ஓகே செய்து அஜித் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆன கட்டளை

Trending News