True Story Movies: பொதுவாக சினிமாவில் எடுக்கக்கூடிய படங்கள் எங்கேயோ நடக்கிற விஷயங்களை அப்பட்டமாக நம் கண்முன் கொண்டுவந்து சேர்ப்பது தான். அப்படிப்பட்ட சம்பவங்களால் எந்த அளவுக்கு பாதிப்படைகிறார்கள் என்பதை சொல்லும் விதமாக சில படங்கள் வந்திருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
நெஞ்சுக்கு நீதி: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளிவந்தது. இதில் உதயநிதி, ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியான உதயநிதி, பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதை விசாரிக்கும் பொறுப்புள்ள போலீசாக நடித்திருப்பார். ஆனால் இதை கண்டுபிடிப்பதற்கு பல சாதி வெறி கொண்ட அதிகாரிகள் இடையூறு செய்வார்கள். அதையும் தாண்டி அந்த கொலையாளியை கண்டுபிடிக்கும் விதமாக கதை நகரும்.
Also read: மாமன்னன் படத்தில் வடிவேலு கேரக்டரில் நடிக்க இருந்த பிரபலம்.. மொத்த பிளானையும் மாற்றிய உதயநிதி
பரியேறும் பெருமாள்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் மாரிமுத்து ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க சாதி வெறியை பிடித்து அலையும் நபர்களை சுட்டிக்காட்டும் விதமாக ஒவ்வொரு காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரியான விஷயங்கள் இன்னும் எத்தனையோ கிராமங்களில் இருக்கிறது என்று உண்மை சம்பவத்தை கண் முன் நிறுத்தி காட்டப்பட்டிருக்கும். முக்கியமாக ஜாதி வெறி பிடித்தவர்கள், மற்றவர்களை சித்திரவதை செய்வதை காட்டி நம் கண்களில் கண்ணீர் வர வைத்திருக்கும்
திரௌபதி: மோகன் ஜி க்ஷத்ரியன் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரிச்சர்ட் ரிசி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் சாதி வெறி தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உண்மை சம்பவத்தை மிக தைரியமாக இப்படத்தின் மூலம் சொல்லி இருப்பார். அதிலும் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் கொடுமையிலிருந்து தப்பித்து நியாயத்திற்காக போராடும் விதமாக கதை நகரும்.
Also read: ஆதி புருஷால் வந்த சுதாரிப்பு.. சிறுத்தை சிவாவுக்கு வார்னிங் கொடுத்த சூர்யா
ஜெய் பீம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, நிஜமோல் ஜோஸ், மணிகண்டன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரான விஷயங்களை தட்டிக் கேட்கும் விதமாக அமைந்திருக்கும். முக்கியமாக எந்த தவறுகளும் செய்யாதவர்களை அரசு தண்டிக்கும் விதத்தை சட்டரீதியாக குரல் கொடுத்து அவர்களுக்கு நியாயத்தை போராடி கொடுக்கும் விதமாக இருக்கும்.
வழக்கு எண் 18 /19: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வழக்கு எண் 18 /19 திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீ, ஊர்மிளா, மிதுன் முரளி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது இன்னமும் சில இடங்களில் நடக்கிற கொடுமையான விஷயங்களை சொல்லும் விதமாக இருக்கும். அதாவது பெண்களின் மேல் இருக்கும் கோபத்தை தீர்க்கும் விதமாக அவர்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி மனதளவிலும், உடலளவிலும் பாதிப்படையை செய்யும் வக்ரபுத்தியை கொண்டவர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக இப்படம் அமைந்திருக்கும்.
கல்லூரி: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு கல்லூரி திரைப்படம் வெளிவந்தது. இதில் தமன்னா, அகில், பரணி, ஹேமலதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் 2000 ஆம் ஆண்டு தர்மபுரி பஸ் எரிந்த சம்பவத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் உயிரிழந்தார்கள். அந்த உண்மையான சம்பவத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கும்.
Also read: ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே