சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காலத்தால் மறக்க முடியாத 6 படங்கள்.. இன்றைக்கும் பார்க்க தூண்டும் மோகனின் அந்த ஒரு படம்

Always Super Hit 6 Movies: சில படங்கள் திரையரங்குகளில் வந்த போது மக்களிடம் அந்த அளவுக்கு ரீச் ஆகாமல் போயிருக்கிறது. பிறகு போகப் போக அந்த படம் சூடு பிடிக்க ஆரம்பித்து நல்ல விமர்சனங்களை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடி லாபத்தை கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள் தற்போது வரை காலத்தால் மறக்க முடியாத படங்களாக நினைவில் இருந்து வருகிறது. அது என்னென்ன படங்கள் என்று ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

அன்னக்கிளி: தேவராஜ் மோகன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவக்குமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், வெண்ணிறை ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் தான் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் காதல் தோல்வியே மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: பாண்டியராஜன் இடம் மன்னிப்பு கேட்ட எம்.ஜி.ஆர்.. கடுகு சிறுதானாலும் காரம் பெரிது

ஒருதலை ராகம்: டி ராஜேந்திரன் எழுதி, இ.எம் இப்ராஹிம் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு ஒருதலை ராகம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சங்கர், ரூபா, சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கல்லூரி மற்றும் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் இப்படம் வெளியாகிய போது மக்களிடம் சரியாக போய் சேரவில்லை. ஆனால் போகப் போக இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை பெற்றது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸில் லாபத்தை பெற்று திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

ஆண்பாவம்: பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு ஆண்பாவம் திரைப்படம் வெளிவந்தது. இதில் பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி, சீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் காதல் மற்றும் நகைச்சுவை என ரெண்டையும் மொத்தமாக கொட்டப்பட்டு இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் நடிப்பை எதார்த்தமாக கொடுத்து படத்தை ரசிக்க வைத்திருப்பார்கள். அதிலும் அண்ணன் தம்பி சேட்டைகள் அனைத்து வீட்டிலும் நடக்கிறதை எதார்த்தமாக காட்டி இருப்பார்கள். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று அதிக வசூலை கொடுத்தது.

Also read: பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

முள்ளும் மலரும்: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், சரத்பாபு, ஜெயலட்சுமி மற்றும் சோபா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, காளி என்ற கேரக்டரில், தங்கை மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பார். பிறகு எதிர்பாராத சூழலில் அவருடைய ஒரு கை பறிபோய்விடும். அடுத்து இவருக்கு பிடிக்காத ஒரு ஆளை தங்கை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் அவருடைய காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதற்கு அடுத்து அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது மீதமுள்ள கதையாகும். இப்படம் வெளிவந்த போது சுமாரான லாபத்தை பெற்றது. போகப்போக மக்களுக்கு பிடித்து போய் அதிக வரவேற்பு கிடைத்தது. அதனால் இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை அள்ளி குவித்தது.

மெல்ல திறந்தது கதவு: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு மெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில்  மோகன், ராதா, அமலா மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜாவும், எம் எஸ் விஸ்வநாதனும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர்களுடைய பாடல்கள் தான் மிகப்பெரிய தூணாக இருந்து வெற்றி பெற வைத்தது. அத்துடன் இப்படத்தின் கதை வித்தியாசமாகவும், இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத வகையில் புதுமையாகவும் இருக்கும்.

சேது: இயக்குனர் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், அபிதா, சிவக்குமார், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கல்லூரி காதலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும். இதற்கு முன்னதாக ஏகப்பட்ட படங்களை நடித்தும் வெற்றியை பார்க்காமல் வந்த விக்ரமிற்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக மாபெரும் ஹிட் கொடுத்தது. தற்போது வரை இப்படம் ஒரு சரித்திர படமாக தான் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தப் படங்கள் அனைத்தும் சினிமாவில் மறக்க முடியாத காவியங்களாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த படங்களின் மூலம் பெரிய நடிகர், நடிகைகளாக மாறுவதற்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

Also read: உச்சம் தொட்டாலும் அலட்டலும், ஆணவமும் இல்லாத 5 நடிகர்கள்.. எதையும் கொண்டாடாத விக்ரம்

Trending News