திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மார்ச் மாதம் ரீ ரிலீஸ் ஆகும் 6 படங்கள்.. விஜய்க்கும் அஜித்துக்கும் இதுல கூட போட்டியா.?

Re-release Movies: எப்போதுமே பழைய விஷயங்களை பார்க்கும் பொழுது அது ஒரு பொக்கிஷமாக தான் அனைவருக்கும் இருக்கும். அதுபோல தற்போதைய படங்களை விட அந்த காலத்து படங்கள் எல்லாம் நன்றாக இருக்கும் என்று இப்பொழுது கூட அதிகம் பேர் முணுமுணுத்து தான் வருகிறார்கள். அந்த வகையில் அவர்களை எல்லாம் குஷிப்படுத்தும் விதமாக ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் வெளிவந்த ஒரு சில படங்கள் இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகப் போகிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

பில்லா: 1980 ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பில்லா திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீ பிரியா, மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ரஜினியின் கேரியரில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் என்றே சொல்லலாம். போலீஸ் என்கவுண்டரில் தப்பித்த பில்லாவை சுற்றி இப்படம் நகரும். அத்துடன் வணிக ரீதியாக வெற்றி பெற்று திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் ஓடியது. அப்படிப்பட்ட இப்படம் மறுபடியும் இந்த மாதத்தில் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது.

கோ: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு கோ படம் வெளிவந்தது. இதில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா நாயர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் செலவு செய்து 50 கோடி லாபத்தை பெற்று வெற்றி பெற்றது. அத்துடன் இப்படம் ஜீவாவின் கேரியரில் மறக்க முடியாத பெஸ்ட் படமாக சூப்பர் ஹிட் ஆனது. அப்படிப்பட்ட இப்படம் மறுபடியும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

Also read: 5 முன்னணி ஹீரோக்களின் முதல் 50 கோடி படங்கள்.. அஜித் vs விஜய், ஜெயித்தது யார் தெரியுமா?

மின்சார கனவு: ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு மின்சார கனவு திரைப்படம் வெளிவந்தது. இதில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது கன்னியாஸ்திரி ஆக விரும்பும் கஜோலை ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் அரவிந்த்சாமி மற்றும் இவருக்கு உதவி செய்யும் விதமாக உள்ளே புகுந்து காதல் வயப்பட்ட பிரபுதேவாவை சுற்றி படம் நகரும். இப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிகரீதியாக வெற்றி பெற்றது. இப்படம் மறுபடியும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

சிட்டிசன்: இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு சிட்டிசன் படம் வெளிவந்தது. இதில் அஜித், மீனா, வசந்தரதாஸ், நக்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் மாறுபட்ட வேடத்தில் நடித்து இவருடைய ஊருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்கும் விதமாக படம் தரமான சம்பவத்தை செய்திருக்கும். அஜித் நடிப்பில் வெளிவந்த படங்களில் மறக்க முடியாத படமாக வெற்றி பெற்றது. இப்படம் மறுபடியும் பார்த்து சந்தோஷப்படும் அளவிற்கு இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது.

காதல் மன்னன்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு காதல் மன்னன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், மானு, எம்எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது நிச்சயமான பெண்ணின் மீது அஜித்திற்கு ஏற்படும் காதல் எப்படி கைகூடுகிறது என்பதை அழகான ஒரு காதல் உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட இப்படம் மறுபடியும் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

ஷாஜகான்: இயக்குனர் ரவி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஷாஜகான் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ரிச்சா பல்லோட், விவேக், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். உண்மையான காதல் என்றால் உயிரையும் கொடுப்பேன் என்பதற்கு ஏற்ப விஜய் இப்படத்தில் அனைவரது காதலியும் சேர்த்துவிட்டு கடைசியில் அவருடைய காதல் தோல்வி அடைந்து சோகத்தில் இருப்பது போல் கதை அமைந்திருக்கும். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று வசூல் ரீதியாக லாபத்தை கொடுத்தது. அந்த வகையில் மறுபடியும் இப்படம் ரீ ரிலீஸ் ஆகப் போகிறது.

Also read: அஜித் வேண்டாம், சிவகார்த்திகேயனுக்கு கிரீன் சிக்னல் போட்ட தயாரிப்பாளர்.. சம்பளத்தை பற்றி மூச்சு விடாத SK

Trending News