வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்தியளவில் அதிக டிக்கெட் புக் செய்யப்பட்ட 6 படங்கள்.. விக்ரமை மிரட்டிவிட்ட கேஜிஎஃப் 2 

2022 ஆம் ஆண்டு இந்திய அளவில் வெளியான திரைப்படங்களில் அதிக அளவில் இணையத்தில் டிக்கெட் புக்  செய்து டாப் 6 படங்கள் மாஸ் காட்டியிருக்கிறது அதிலும் உலகநாயகனின் விக்ரமை கேஜிஎஃப் 2 மிரட்டி விட்டது. 

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பட்டையை கிளப்பியது. தனக்கே உரிய பாணியில் அசத்தி இருந்த கமல் இந்த படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸையே தெறிக்க விட்டார். அந்த வகையில் உலக நாயகன் சர்வதேச அளவில் ஒரு சாதனையாளராக மாறியது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்திய அளவில் அதிக டிக்கெட் புக் ஆன படங்களின் லிஸ்டில் இந்த படத்திற்கு 6-வது இடம் கிடைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன்: இந்த வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி உள்ளார். இது தமிழர்களின் வரலாற்று திரைப்படம் ஆகும். இதில் நடிகர் விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில் இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அதன் இரண்டாவது பாகம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  அதிலும் இந்திய அளவில் புக் மை ஷோவில் அதிக டிக்கெட் புக் ஆன படங்களின் லிஸ்டில் இந்த படத்திற்கு 5-வது இடம் கிடைத்திருக்கிறது.

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

தி காஷ்மீர் பைல்ஸ்: விவேக் அக்னி கோத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் காஷ்மீரில் நடந்த சில சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் பற்றியும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் காஷ்மீரை பற்றி தெரியாத பல விஷயங்கள் இப்படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் புக் மை ஷோவில் இந்திய அளவில் அதிக டிக்கெட் புக் ஆன படங்களின் லிஸ்டில் இந்த படத்திற்கு 4-வது இடம் கிடைத்திருக்கிறது.

காந்தாரா: கன்னட மொழியில் வெளியாகி காந்தாரா திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து நிலைத்து நிற்கிறது. நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். காந்தாரா திரைப்படம் கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு அடுத்து உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது கன்னட படம் ஆகும். 16 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது. அதிலும் இந்திய அளவில் அதிக டிக்கெட் புக் ஆன படங்களின் லிஸ்டில் இந்த படத்திற்கு 3-வது இடம் கிடைத்திருக்கிறது.

Also Read: 2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 6 படங்கள்.. சர்வதேச அளவில் சாதனை படைத்த ஆண்டவர்

ஆர்ஆர்ஆர்: ராஜ மவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் வசூலிலும் சோடை போகவில்லை. தேசப்பற்று மிக்க இந்த படம் இந்திய அளவில் அதிக டிக்கெட் புக் ஆன படங்களின் லிஸ்டில் இந்த படத்திற்கு 2-வது இடம் கிடைத்திருக்கிறது.

கேஜிஎப் 2: இந்த படத்தின் முதல் பாகமே, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தங்க சுரங்கத்திற்காக பொதுமக்களை அடிமைபடுத்தியவர்களை யாஷ் அழிப்பதாக முதல் பாகத்தில் இருந்தது, இரண்டாம் பாகத்தில் அந்த தங்க சுரங்கத்திற்கு அவரே முதலாளியாக இருந்து மாஸ் காட்டினார். இந்தப்படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி 1200 கோடியை குவித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இணையத்தில் அதிக டிக்கெட் புக் செய்த படங்களின் லிஸ்டில்  கே ஜி எஃப் 2-க்கு முதலிடம்  கிடைத்து விக்ரமை மிரட்டி விட்டிருக்கிறது.

Also Read: IMDB வெளியிட்ட 2022 சிறந்த டாப் 10 படங்கள்.. இந்தியளவில் டஃப் கொடுத்த காந்தாரா

இவ்வாறு இந்த ஐந்து படங்கள் தான்  2022-ல்  இந்திய அளவில் வெளியான படங்களின் லிஸ்டில் இணையத்தில் ரசிகர்களால் ஆர்வத்துடன் அதிக டிக்கெட் புக் செய்த டாப் 6 படங்களாகும்.

Trending News