வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கவர்ச்சியை கையில் எடுத்தும் தோத்துப்போன 6 நடிகைகள்.. அட்ரஸ்சே இல்லாமல் போன அரேபிய குதிரை நமிதா

6 Glamorous Actresses changed his careers: பெண் என்பவள் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேல் அதைப் பார்க்க முடியாது என்பது சைக்காலஜிக்கல் நியூஸ். சினிமாவில் தேவை ஏற்படுகிறதோ இல்லையோ சில படங்களில் கவர்ச்சியை புகுத்தி விடுகின்றனர்.

நடிகைகள் சிலரோ வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கவர்ச்சியான முறையில் போட்டோ சூட் நடத்தி  அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.  கவர்ச்சியை மட்டுமே ஆயுதமாக  எடுத்த நடிகைகள் வெற்றி பெற்றார்களா என்பது கேள்விக்குறியே. கவர்ச்சியாக நடித்தும் வாய்ப்பை இழந்து ஓரங்கட்டப்பட்ட நடிகைகளில் சிலர் இதோ,

நமீதா: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பலமொழிகளிலும் அறியப்பட்ட சூரத் அழகி நமீதா விஜயகாந்த் உடன் தமிழில் எங்கள் அண்ணாவில் தோன்றினார். ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நமீதா ஒரு கட்டத்திற்கு பின்  உடல் எடை கூடிய நிலையில் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டு டான்ஸ் ஷோ, பிக் பாஸ் ஷோ என பல சோக்களில் கலந்து கடைசியில் அரசியல் பிரச்சாரமும் செய்து எதுவும் க்ளிக் ஆகாமல் போகவே  திருமணம், குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார்.

கிரண்: ஜெமினி படத்தில் இளம்புயலாக உருவெடுத்தார்  கிரண். இப்படத்தில் இவர் காட்சிகள் வரும் போது ஆட்டோ கவிழ்வது, புயல் அடிப்பது என பல மாஸ் காட்சிகளை வைத்திருந்தார்கள். அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம் என முன்னணி முன்னணி நடிகர்களுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கிரணுக்கு தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் போகவே கவர்ச்சி கவர்ச்சியாக விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என  ஆரம்பித்து ஆம்பள படத்தில் விஷாலுக்கு சின்ன மாமியார் ஆகவே நடித்து விட்டார்.

ஓவியா: களவாணியில் விமலுடன் அறிமுகமான ஓவியா முதல் படத்திலேயே வெகுளித்தனமான பள்ளி மாணவியாக ரசிகர்கள் மனதில் ஒட்டி இருந்தார்.  சில படங்களுக்குப் பின் பிக் பாஸ் சோவில் தலைகாட்டிய ஓவியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது.  ரசிகர்களுக்கு ஏதாவது செய்வேன் என்று கூறிக் கொண்ட ஓவியா என்ன செய்தார் என்று தான் தெரியவில்லை. படத்தில் கவர்ச்சி காட்டுகிறேன் என்று சொல்லி காணாமல் போய்விட்டார்.

Also read: ஓவியாவிற்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம்.. மணி ரவீனாவை விட எல்லை மீறும் ஜோடி புறாக்கள்

ராய் லட்சுமி: மாடலிங் ஆக தன் கலை பயணத்தை ஆரம்பித்த ராய் லட்சுமி “கற்க கசடற” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தாம் தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் பேசப்பட்ட ராய் லட்சுமி சினிமா வாய்ப்பு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடைசியாக தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சினிமா கைவிட்டாலும் கவர்ச்சியை கைவிடுவதில்லை  என்ற கொள்கையுடன் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

ரீமாசென்: 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் நடிகையான ரீமாசென் “மின்னலே” படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இவர் நடித்த செல்லமே, திமிரு படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவரின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருந்த நிலையில் சிம்புவுடன் வல்லவனிலும் ஆயிரத்தில் ஒருவனிலும் நெகட்டிவ் கேரக்டரில் தோன்றி நடிகர்களை படுத்தி எடுத்திருப்பார். ஜேஜே படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி ரசிகர்களுக்கு பாய் சொல்லி  விட்டார். மும்பையில் உள்ள தொழில் அதிபரை மணந்து குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.

மும்தாஜ்: கட்டிப்பிடி பாடலின் மூலம் பிரபலமான மும்தாஜ்  பல படங்களில் கவர்ச்சியாகவே நடித்திருந்தார். வீராசாமி படத்தில் டி ராஜேந்திரன் உடன் குணச்சித்திர வேடத்தில் தோன்றினாலும் ரசிகர்கள் அவரை ஏற்கத் தவறினர்.  பிக் பாஸ் சோ வில் அதிக நாட்கள் பயணித்து ரசிகர்களின் மனதை வென்றார். சிறுவயதிலிருந்தே நடிகையாக  வேண்டும் கனவு கண்ட மும்தாஜ் நடிகை ஆனார் ஆனால் நிலைத்து நிற்கத்தான் முடியவில்லை.

Also read: 3 நடிகைகளுடன் ஜல்சா பண்ணும் வி நடிகர்.. அர்த்த ராத்திரியில் ஈசிஆரில் நடக்கும் கூத்து

Trending News