புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடிகைகளுக்கு ஓகே ஆனாலும் லிப் லாக் வேண்டாம் என மறுக்கும் 6 உத்தம நடிகர்கள்.. த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த ஹீரோ

Actress Trisha: கரும்பு தின்ன கூலியா என்பது போல், சினிமாவில் ஒரு சில நடிகர்கள் லிப் லாக் காட்சிகள் என்று வந்துவிட்டால் பட்டையை கிளப்புவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் நடிப்பதற்கு நடிகைகளுக்குத்தான் ஒரு தனி தைரியம் வேண்டும். ஒரு சில நடிகர்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். நடிகைகளே ஓகே சொன்னாலும் இந்த நடிகர்கள் லிப் லாக் காட்சியை வேண்டவே வேண்டாம் என மறுத்து விடுகிறார்கள்.

அஜித்குமார்: ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக இருந்தவர்தான் அஜித்குமார். ஹீரோயின்களை உருகி உருகி காதலித்த இவர், கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய படங்களில் கதாநாயகிகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. மேலும் எந்த ஒரு நெருக்கமான காட்சியும் இவருடைய படத்தில் இப்போதெல்லாம் வைப்பது கிடையாது.

Also Read:7 முறை கட்டாய கருக்கலைப்பு, புது குண்டை போட்ட விஜயலட்சுமி.. சீமான் சிக்குவாரா.? கடைசியாக எடுத்த அஸ்திரம்

சூர்யா: சூர்யா முத்த காட்சி என்று மட்டும் இல்லை, மது அருந்துவது போல், புகை பிடிப்பது போல் கூட எந்த ஒரு படத்திலும் நடிப்பது கிடையாது. இவரும் லிப்லாக் காட்சி என்றாலே தெறித்து ஓடும் ஹீரோ தான். மாற்றான் படத்தில் கூட காஜல் அகர்வாலுடன் வைக்கப்பட்டிருந்த காட்சி தொழில்நுட்ப உதவியால் தான் எடுக்கப்பட்டது.

சிபிராஜ்: சமீப காலமாக வித்தியாசமான திரைகக்தையை கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜும் தன்னுடைய படங்களில் லிப் லாக் காட்சிகளை விரும்புவது கிடையாது. இதற்கு முக்கியமான காரணம் அவருடைய மகன்தான். தன்னுடைய மகன் படம் பார்க்கும் பொழுது இது போன்ற காட்சிகள் இடம்பெறக்கூடாது என உறுதியாக இருப்பதாக சிபி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலினுக்கு பெரும்பாலும் ரொமான்ஸ் காட்சிகள் செட் ஆகாது என்பதுதான் உண்மை. காமெடியான காட்சிகளில் தான் அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார். இவரும் லிப்லாக் காட்சியை விரும்பாத நடிகர். கலகத் தலைவன் திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடிக்க சொன்ன போது வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். பின்பு அது தொழில்நுட்ப உதவியுடன் எடுக்கப்பட்டதாம்.

Also Read:கங்குவா படத்தில் குவிந்துள்ள 10 பிரபலங்கள்.. பிரசாந்த் நீல், ராஜமௌலிக்கே டஃப் கொடுக்கும் சிறுத்தை

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி நடிப்பில் 90ஸ் கிட்ஸ்களை கலங்கடித்த படம் தான் 96 . இந்த படத்தை பார்த்த எல்லோருக்கும் தங்களுடைய பள்ளி காதல் ஞாபகம் வராமல் போயிருக்காது. இதன் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவுடன் லிப்லாக் காட்சியை வைத்திருந்திருக்கிறார் இயக்குனர். ஆனால் விஜய் சேதுபதி அப்படி ஒரு காட்சி வேண்டவே வேண்டாம், இது மற்றவர்களுக்கு தப்பான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று சொல்லி மறுத்து விட்டாராம்.

சிவகார்த்திகேயன்: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றதால் எப்போதுமே சிவகார்த்திகேயன் படங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் இவர் தன்னுடைய படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு எந்த காட்சியையும் வைப்பது கிடையாது. அதிலும் சிவா லிப்லாக் காட்சியை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

Also Read:அடுத்தடுத்து 5 பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கைகோர்த்திருக்கும் சூர்யா.. கங்குவாவை மிஞ்சுமா லோகேஷ் கூட்டணி

Trending News