வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி போல நமக்கு வாய்ப்பு வரும்போது சினிமாவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சில நடிகர்கள் தலைகனத்தால் அவர்களது கேரியரை தொலைத்துள்ளனர். அந்த 6 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

ஜெய் : சுப்ரமணியபுரம் படம் ஜெயிக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்தது. சினிமாவில் ஜெய் முன்னணி நடிகராக ஜொலிப்பார் என்று நினைத்த நிலையில் தலை கனத்தால் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. தற்போது ஜெய் ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார்.

Also Read : ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. தயாரிப்பாளர் செய்த சூழ்ச்சி

அதர்வா : நடிகர் முரளியின் வாரிசாக சினிமாவில் நுழைந்த அதர்வா பானா காத்தாடி, பரதேசி போன்ற படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை அல்லது குடித்துவிட்டு வருவது பார்ட்டி என தனது பெயரை அதர்வா கெடுத்து கொண்டார்.

நகுல் : நகுல் தனது துறுதுறுப்பான நடிப்பால் ஒரு பிளேபாயாக வலம் வந்தார். ஆனால் நடித்தால் பெரிய இயக்குநர்கள் படத்தில் தான் நடிப்பேன் என விடாப்பிடியாக உள்ளார். அதுமட்டுமின்றி புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு தர மறுத்துள்ளார்.

Also Read : தேவயானி, ராஜகுமாரன் காதலில் வெடித்த பூகம்பம்.. வெறியாய் சுற்றிய நகுல்

நிதின் சத்யா : சென்னை 600028, சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை, அரண்மனை போன்ற படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. ஆரம்பத்தில் சைடு கேரக்டர் என்றாலும் இவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கேரியரை தொலைத்துள்ளார்.

அட்டகத்தி தினேஷ் : அட்டகத்தி, விசாரணை போன்ற படங்களில் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்தவர் அட்டகத்தி தினேஷ். சமீபகாலமாக இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் இவருடைய மோசமான அணுகுமுறை என கூறப்படுகிறது.

Also Read : தியேட்டரில் முகம் சுழிக்க வைத்த 5 அடல்ட் படங்கள்.. சீரழிந்து சின்னாபின்னமாகும் சினிமா

விமல் : களவாணி படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகர் விமல். ஆனால் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். அதுமட்டுமின்றி சில பண மோசடி வழக்கிலும் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்து இருந்தார். இதனால் சினிமாவில் விமல் நிலைத்து நிற்க முடியாமல் போனது.

Trending News