புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இயக்குனர்களை கல்யாணம் செய்த 6 ஹீரோயின்கள்.. காதலுக்கு கண் இல்லை என நிரூபித்த நடிகை

திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்றுதான். அப்படி ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கின்றனர். ஆனால் தங்களை வைத்து படம் இயக்கிய டைரக்டர்களையே சில ஹீரோயின்கள் காதலித்து திருமணம் செய்திருக்கின்றனர். அந்த நட்சத்திர ஜோடிகளை பற்றி இங்கு காண்போம்.

மணிரத்னம் – சுகாசினி: திரையுலகில் சிறந்த ஜோடிகளாக வலம் வரும் இந்த தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சுகாசினி ஒருமுறை கூட தன் கணவர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்தது கிடையாது. ஆனாலும் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

எப்படி என்றால் மணிரத்னம் ஒரு முறை சுகாசினியை தன் படத்தில் நடித்த கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதுவே சுகாசினி மீது ஒரு காதலை மணிரத்தினத்திற்கு ஏற்படுத்தி இருக்கிறது. இப்படித்தான் அவர்களுடைய காதலும் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது.

Also read : ரஜினி மகள்களால் நகுல் எடுத்த முடிவு.. இன்று வரை ஒதுங்கி இருக்கும் தேவயானி

ராஜகுமாரன் – தேவயானி: காதலுக்கு கண் இல்லை என்ற வார்த்தைக்கு பொருத்தமாக இருக்கும் ஜோடி இவர்கள்தான். அழகு பதுமையாக ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த தேவயானி, ராஜகுமாரன் இயக்கத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போது ஆரம்பித்த இவர்களுடைய நட்பு பிறகு காதலாக மாறியது. இது மிகவும் ரகசியமாக இருந்த நிலையில் தேவயானி வீட்டை விட்டு வெளியேறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் ஒரு ஆட்டு ஆட்டியது. பலரும் உங்கள் அழகு என்ன அவர் அழகென்ன எதற்காக இப்படி ஒரு திருமணம் என்று வெளிப்படையாகவே தேவயானிடம் கேட்டனர். ஆனால். அதற்கு அவர் சொன்ன ஒரே பதில் காதல் என்பது தான். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

சுந்தர் சி – குஷ்பூ: திருமணம் ஆகி பல வருடங்கள் கழிந்தாலும் இன்றும் அதே காதலுடன் இருக்கும் இந்த ஜோடி ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக இருக்கின்றனர். பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கின்றனர்.

Also read : 20 வருடம் கழித்து மணிரத்னத்துடன் இணைந்துள்ள ஜாம்பவான்.. கூடவே இருந்தும் நடிக்காத 80ஸ் ஹீரோயின்

ஆர் கே செல்வமணி – ரோஜா: முன்னணி நடிகையாக இருந்து தற்போது அரசியலில் கலக்கி கொண்டிருக்கும் ரோஜா ஆர்கே செல்வமணியின் செம்பருத்தி திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அப்போது ஆரம்பித்த இவர்களுடைய காதல் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

பொன்வண்ணன் – சரண்யா: பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருக்கின்றனர். அதனால் பொன்வண்ணன் சரண்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை எதிர்பார்க்காத சரண்யா தன் தந்தையிடம் கூறி இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார். அந்த வகையில் இவர்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கின்றனர்.

பாக்யராஜ் – பூர்ணிமா தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வந்த பாக்யராஜின் முதல் மனைவி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதன் பிறகு நடிகை பூர்ணிமாவை காதலித்த பாக்யராஜ் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாந்தனு, சரண்யா என்ற இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

Also read : 80-களில் கொடிகட்டிப் பறந்த 5 நடிகைகள்.. இன்று அம்மா வேடத்தில் பட்டையைக் கிளப்புறாங்க

Trending News