Simran: இப்பொழுது தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெண்கள் சம்பந்தமான கதைகள் வைத்து எடுக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் தான் தற்போது ஹீரோயின்களின் மவுசு கூடிக் கொண்டே வருகிறது.
ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட 90ஸ் காலத்தில் உள்ள ஹீரோயின்கள் வெறும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு டூயட் பாடி ரொமான்ஸ் பண்ணும் அளவிற்கு தான் வந்துட்டு போவார்கள்.
அப்படிப்பட்ட அந்த சமயத்திலேயே தனித்துவமான நடிப்பாலும் இடுப்பை ஆட்டி ஆடும் நடனத்தையும் வைத்து பார்ப்பவர்களை கொள்ளை அடித்தவர் தான் நடிகை சிம்ரன்.
அதனாலேயே ஹீரோக்களை விட சிம்ரனின் நடிப்பு ரொம்ப தூக்கலாகவே இருக்கும். அப்படி இவருடைய நடிப்பில் மறக்க முடியாத எத்தனையோ ஹிட் படங்கள் இருக்கிறது. அதில் சூப்பர்ஹிட் படமான ஆறு படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
நேருக்கு நேர்: இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா நடிப்பில் நேருக்கு நேர் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்ரன் சூர்யாவின் காதலியாக நடித்திருக்கிறார்.
அதிலும் “எங்கெங்கே எங்கே எங்கே இன்பம் உள்ளது” என்று பாடலில் ஆடிய சிம்ரனின் நடிப்பையும் அந்த பாடலையும் நூறு தடவை பார்த்தாலும் சலிக்காது அந்த அளவிற்கு இளமை துள்ளலுடன் ஆடி இருப்பார்.
வாலி: எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் வாலி திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் சிம்ரனின் நடிப்பை பார்க்கும் பொழுது இவர்தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு ஏற்ப நடிப்பை எதார்த்தமாகவும் ரசிக்கும்படியாக கொடுத்து இளசுகளின் மனதை கொள்ளையடித்திருக்கிறார்.
துள்ளாத மனமும் துள்ளும்: எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு விஜய், சிம்ரன் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளிவந்தது.
இதில் சிம்ரன், விஜய்யை பார்க்கும் பொழுது கெட்டவராகவும் மனதிற்குள் ஒரு நல்ல கேரக்டராகவும் காதலித்து வருமாறு நடிப்பை கொடுத்திருப்பார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் சிம்ரனின் நடிப்பை பார்த்து கை தட்டாமலே இருக்க முடியாது அந்த அளவிற்கு தூள் கிளப்பி இருப்பார்.
பிரியமானவளே: செல்வ பாரதி இயக்கத்தில் 2000 ஆண்டு விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் பிரியமானவளே திரைப்படம் வெளிவந்தது. இதில் காண்ட்ராக்ட் மூலம் ஒரு வருஷத்துக்கு மட்டும் விஜய்க்கு மனைவியாக பிரியா கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்திருப்பார்.
ஆனால் இப்படத்தை பார்க்கும் பொழுது வெறும் நடிப்புக்காக மட்டும் இல்லை நிஜத்திலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கன்னத்தில் முத்தமிட்டால்: மணிரத்தினம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளிவந்தது.
இதில் சிம்ரன் ஒரு சிறந்த அம்மாவாகவும், நல்ல மனைவி மற்றும் குடும்ப தலைவியாகவும் பொறுப்பான கதாபாத்திரத்தில் நடித்து ஒரு மரியாதை மிகுந்த வரவேற்பை கொடுக்கும் வகையில் நடிப்பை கொடுத்திருப்பார்.
வாரணம் ஆயிரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சூர்யா, சமீரா மற்றும் சிம்ரன் நடிப்பில் வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்தது.
இதில் சிம்ரன் அம்மா கேரக்டரில் நடித்திருந்தாலும், இவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக இருக்கு என்று சொல்லும் அளவிற்கு தனித்துவமான நடிப்பை கொடுத்து கைதட்டுகளை பெற்றிருக்கிறார்.
![simran family pic](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/simran-family-pic.webp)
![simran family](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை திறமை உள்ள சிம்ரன் இன்று 48வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். கல்யாணம் குழந்தை என்று ஆனதும் குடும்பத்திற்கு தான் முதல் பொறுப்பு என்று ஒரு சிறந்த பெண்மணி ஆக குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்.
அப்படிப்பட்ட இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இவருடைய இரண்டு மகன்கள் மற்றும் கணவருடைய இருக்கும் புகைப்படம் உள்ளது. அந்த வகையில் பெரிய மகனின் முக ஜாடை அப்படியே சிம்ரன் மாதிரியே இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இவருடைய திரை பயணம் இன்னும் வெற்றிகரமாக தொடர வேண்டும் என்று இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்ரனை மனதார வாழ்த்துவோம்.