திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2022 ஐ அதிர வைத்த 6 சம்பவங்கள்.. வருஷ தொடக்கத்திலே ஷாக் கொடுத்த தனுஷ்

இந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுத்திருக்கும். அதிலும் சினிமா துறையை பொறுத்தவரையில் இந்த வருடம் சந்தோஷம், துக்கம், அதிர்ச்சி, பரபரப்பு என எல்லாம் கலந்த கலவையாக தான் நகர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 6 சம்பவங்களை பற்றி இங்கு காண்போம்.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வருடத்தின் தொடக்கத்திலேயே இப்படி ஒரு செய்தி வெளிவந்து ரசிகர்களை கடும் அதிர்ச்சியாக்கியது. கடந்த ஜனவரி மாதம் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். அதை தொடர்ந்து இது குறித்து இப்போது வரை பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இருப்பினும் இந்த ஜோடி மீண்டும் இணையும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Also read : லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த ஆபத்து.. அடுத்தடுத்த தோல்விகளால் கவனிக்கப்படாமல் போன நயன்தாரா

பாலா – முத்து மலர் விவாகரத்து சர்ச்சை இயக்குனராக வலம் வரும் பாலா இந்த வருடம் தன் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் திடீரென விவாகரத்து செய்தது பெரும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

ரவீந்தர் – மகாலட்சுமி திருமணம் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது மீடியாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. பலரும் இந்த விஷயத்தை நம்ப முடியாத அதிர்ச்சியுடன் தான் பார்த்தனர். அந்த அளவுக்கு பரபரப்பை கிளப்பிய இந்த திருமணம் சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தையே கிளப்பியது.

நயன்தாரா வாடகைத்தாய் பிரச்சினை கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக திருமணம் செய்து கொண்ட நயன்தாரா சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டதாக அறிவித்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகயும் கிடுகிடுக்க வைத்தது. அதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொண்ட நயன்தாராவை சுற்றி ஏராளமான பிரச்சனைகள் கிளம்பியது. ஆனால் அவர் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை மேற்கொண்டதால் தற்போது இந்த பிரச்சனை ஓய்ந்துள்ளது.

Also read : இறுதி சடங்கை செய்ய விடாமல் கொடுமைப்படுத்திய பாலா.. வெறுத்து போய் சாபம் கொடுத்த தயாரிப்பாளர்

வணங்கான் ட்ராப் பாலாவின் இயக்கத்தில் சூர்யா வணங்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் தற்போது நின்று போய் உள்ளது. இந்த படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் பாலா மீது ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி வருகிறது.

சமந்தா உடல்நலம் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில வருடங்களாகவே ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் அவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் தற்போது அவர் அரிய வகை உடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து வெளிப்படையாக தெரிவித்த அவர் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருவதாக கூறினார். இந்த விஷயம் திரையுலகில் பரப்பரப்பை கிளப்பியது.

Also read : சிக்ஸ்பேக் நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா.. மிரர் செல்ஃபியால் மிரண்டுபோன இணையதளம்

Trending News