செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முதல் நாளே உலக அளவில் வசூல் வேட்டையாடிய 6 படங்கள்.. பாலிவுட்டை கதிகலங்க செய்த அட்லி

6 First Day Big collection Indian Movies: இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிக அளவு படங்கள் வெளியானாலும் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை எகிற செய்த படங்கள் இதோ,

RRR: பிரம்மாண்டத்திற்கு பேர் போன தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலி இயக்கி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்  நடித்து வெளிவந்த ஆர் ஆர் ஆர் படத்தின்  முதல் நாள் வசூல் மட்டுமே 223 கோடி. இந்த படம் வசூல் வேட்டையில் மட்டுமல்லாது பல அவார்டுகளையும் வாங்கி குவித்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு என்ற பாடல் ஆஸ்கார் அவார்டை பெற்றது மகிழ்ச்சியான தருணம்.

பாகுபலி : இந்திய சினிமா ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த  ராஜமௌலியின் பாகுபலி முதல் நாளில் 217  கோடி வசூல் வேட்டை நடத்தியது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்று இந்தியாவின் நம்பர் ஒன் படமாக வெற்றி நடை போட்டது. கதைக்களமும் கதாபாத்திரமும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

KGF 2: கன்னட பட உலகில்  திருப்புமுனையை ஏற்படுத்திய கேஜிஎப் 2 திரைப்படம் முதல் நாள் வசூல்  159 கோடியை அள்ளி குவித்தது. பிரசாந் நீல் இயக்கி யாஷ், சஞ்சய் தத் மற்றும் ஸ்ரீநிதி நடித்த இப்படத்திற்கு இந்திய திரையுலகில் தனி முத்திரை கிடைத்தது.  ரசிகர்கள் KGF ன்  அடுத்த பாகத்திற்காக  ஆவலுடன் எதிர்பார்த்து  காத்துக்கொண்டிருக்கின்றனர்.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விஜய்யின் ஆக்சன் திரில்லர் திரைப்படம் லியோ, கடந்த அக்டோபர் 19 அன்று வெளியாகி முதல் நாளிலேயே 142 கோடி வசூல் செய்தது. ரஜினியின் எந்திரன் 2.0 வை பின்னுக்குத் தள்ளி  முதல் நாள் அதிக வசூல் செய்ததோடு மட்டுமன்றி வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் தமிழ் படமாக உள்ளது.

ஜவான்: அட்லி இயக்கத்தில் அனிருத் திசையில் தீபிகா படுகோன், சன்யா மல்கோத்ரா மற்றும் பிரியாமணி, நயன்தாரா, விஜய் சேதுபதி என்ற தமிழ் நட்சத்திரங்களுடன் கைகோர்த்த சாருக்கானின் ஜவான் திரைப்படம் தரமான ஆக்சன் திரில்லர் படமாக இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவந்து முதல் நாளில் 129 கோடியே வாரி குவித்தது.

2.0: சங்கரின் 2010 இல் வெளிவந்த எந்திரனின் தொடர்ச்சியாக 2.0 அமைந்தது. ரஜினி, எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் முதல் நாள் வசூல் 105 கோடி  உலக அளவில் வெளியான முதல் நாளே அதிக வசூல் செய்த இந்திய படமாக சாதனை படைத்தது.  இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் முதல் தமிழ் படமாக அமைந்தது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Trending News