ஓவர் நைட்டில் சினிமா கேரியரை கெடுத்துக்கொண்ட 6 நட்சத்திரங்கள்.. அதல பாதாளத்திற்கு சென்ற வடிவேலு!

Vadivelu: ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது போல் நிறைய நடிகர்கள் சட்டென உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு சில காரணத்தால் ஒரே நைட்டில் மொத்த கேரியரையும் இழந்த கலைஞர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆறு பேரை பற்றி பார்க்கலாம்.

வடிவேலு: வடிவேலு கேரியர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ஒரு பக்கம் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றிருந்த ஆசை, இன்னொரு பக்கம் விஜயகாந்த் உடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை.

இது இரண்டும் வடிவேலுவை பாடாயப்படுத்த அவர் அரசியல் களத்தில் குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து களம் இறங்கினார்.

இதனால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக வடிவேலு சினிமாவில் தலை காட்ட முடியாமல் ஆனது. இப்போது மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தாலும் அவரிடம் பழைய மவுசு இல்லை என்பது தான் உண்மை.

நாகேஷ்: நாகேஷ் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய பரிணாமம் என்பது யாராலும் மறக்க முடியாதது. டாப் ஹீரோக்கள் எல்லோரும் நாகேஷிடம் கால்ஷீட் வாங்கிய பிறகு தான் அந்த படத்திற்கே ஒத்துக்கொள்வார்களாம்.

அப்படிப்பட்ட சமயத்தில் மது அருந்திய போது நாகேஷ் எம்ஜிஆர் மற்றும் மனோரமா பற்றி பேசிய சில விஷயங்கள் வெளிவந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கிறது.

குஷ்பு: நடிகை குஷ்பூ சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் வாரிசு நடிகர் ஒருவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அவர் திருமணமானவர் என்பதால் வீட்டில் இந்த காதலுக்கு பயங்கர எதிர்ப்பு.

நடிகரின் அப்பா கோலிவுட் சினிமா உலகில் மிகப்பெரிய ஆளுமை என்பதால் அப்போது குஷ்பூக்கு தமிழ் சினிமாவின் யாருமே வாய்ப்புகள் கொடுக்க முன்வரவில்லை.

அமலா பால்: நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளை தாண்டி நல்ல திறமையானவர் அமலாபால்.
தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட காலகட்டத்தில் இவர் ரொம்ப சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். கடைசியில் அந்த வாழ்க்கையும் நிலைக்காமல் சினிமாவிலும் நீடிக்க முடியாமல் போனது.

சோனியா அகர்வால்: நடிகை சோனியா அகர்வால் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கமிட் ஆன போது தான் செல்வராகவனுடன் திடீரென திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கியும் இருந்தார். எந்த திருமண வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகினாரோ அந்த வாழ்க்கையும் அவருக்கு நிலைக்கவில்லை.

ரவி மோகன்: எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத ஹீரோக்களின் லிஸ்டில் இருந்தவர்தான் ரவி மோகன். அவருடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது அதிகமாக பேசும் பொருளாக மாறிவிட்டார்.

மேலும் தொடர்ந்து அவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →