செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

90ஸ் கிட்ஸ்களை மொத்த கன்ட்ரோலில் வைத்திருந்த 6 இந்தி டப்பிங் சீரியல்கள்.. சூர்யா-ஜோ ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்ட அபி-பிரக்யா

Serial: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியல்கள் என ஒரு பெரிய லிஸ்ட்டை போட்டு விடலாம். அதிலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தியிலிருந்து தமிழ் டப்பிங் செய்யப்பட்ட சீரியல்கள் இறக்குமதி ஆகின.

தமிழ் சீரியல்களை மறக்கும் அளவுக்கு இந்த சீரியல்களை பார்க்கத் தொடங்கினார்கள். அப்படி 90ஸ் கிட்ஸ்களை மொத்த கண்ட்ரோலில் வைத்திருந்தார் ஆறு இந்தி டப்பிங் சீரியல்களை பற்றி பார்க்கலாம்.

6 இந்தி டப்பிங் சீரியல்கள்

சிந்து பைரவி: ராஜ் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் சிந்து பைரவி. சின்ன வயதில் இருந்தே உண்மையான அன்புடன் பழகும் தோழிகளை பற்றிய கதை.

ஒரு கட்டத்தில் இந்த தோழிகளே எதிரிகள் ஆகும் பொழுது நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தான் சுவாரசியம்.

உள்ளம் கொள்ளை போகுதடா: ஜெயா டிவியில் ஒளிபரப்பான தொடர் உள்ளம் கொள்ளை போகுதடா.

திருமண வயதை கடந்த இரண்டு பேர் திருமணம் செய்து அதன் பின்னர் அவர்களுக்குள் நடக்கும் அழகான காதல் கதை.

இந்த சீரியலை தான் தமிழ் உருவாக்கம் செய்து ரேஷ்மா மற்றும் ஆகாஷ் நடிப்பில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை எடுத்தார்கள்.

உறவுகள் தொடர் கதை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் உறவுகள் தொடர்கதை. இந்த சீரியலில் வரும் கார்த்திக் அர்ச்சனா ஜோடிக்கு அப்போது ரசிகர்கள் அதிகம்.

இதில் அர்ச்சனா என்னும் கேரக்டரில் பிரபல இந்தி நடிகை ஹினா கான் நடித்திருப்பார்.

என் கணவன் என் தோழன்: விஜய் டிவியில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல்களில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என் கணவன் என் தோழன்.

இந்த சீரியலின் வரவேற்பின் காரணமாகவே ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை ஒளிபரப்புவார்கள். இந்த சீரியலின் தமிழ் உருவாக்கம் தான் ஆலியா மானசா, சித்து நடித்த ராஜா ராணி 2.

இனிய இரு மலர்கள்: ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்தி டப் சீரியல்தான் இனிய இரு மலர்கள். இந்த சீரியலின் ஜோடிகள் ஆன அபி மற்றும் பிரகியா சூர்யா ஜோதிகா ரேஞ்சிக்கு பிரபலமானார்கள்.

இந்த சீரியல் பல வருடங்களுக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டது.

நாகினி: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தமிழ் நாகினி. இதன் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதல் சீசன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News