சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

போலீஸ் வழக்கில் சிக்கிய 6 சினிமா பிரபலங்கள்.. எல்லாத்துக்கும் காரணம் புட்டியும், பொட்டியும் தான்

சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி உள்ளனர். இதனால் அந்த பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்க்கையை மறைமுகமாக வைத்துக்கொள்ள முடிவதில்லை. இதில் சில நடிகர், நடிகைகள் போலீஸ் வழக்கில் சிக்கி உள்ளனர். அவ்வாறு போலீஸ் வழக்கில் சிக்கிய 6 பிரபலங்களை தற்போது பார்க்கலாம்.

ஜெய் : சென்னை 600028, ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். இவர் ஒருமுறை மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருந்தார். அப்போது ஜெய்யுடன் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜியும் உடன் இருந்துள்ளார். அந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படாவிட்டாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

அஞ்சலி : கற்றது தமிழ், அங்காடித்தெரு, கலகலப்பு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமாவுக்கு வர அவரது சித்தி பாரதிதேவி தான் காரணமாம். ஆனால் இவர்களுக்குள் சில கருத்து வேறு காரணமாக இது போலீஸ் கேஸ் வரை சென்றது. அவரது சித்தி அஞ்சலியின் மீது போலீஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மதுமிதா : தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. பெருமாளும் சந்தானத்திற்கு ஜோடியாக படங்களில் இவர் நடித்துள்ளார். மதுமிதா தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உஷாவுக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் உஷா மதுமிதா மீது போலீஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

செந்தில் : காமெடி ஜாம்பவானான செந்தில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் கவுண்டமணி, செந்தில் காம்போவில் வெளியாகும் காமெடி வேற லெவல் இருக்கும். ஒருமுறை செந்தில் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும்போது ஒரு எம்பியை விமர்சித்திருந்தார். அதை எம்பி கொடுத்த புகாரின் பேரில் செந்தில் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது.

சந்தானம் : டைமிங்கில் காமெடியில் கலக்க கூடியவர் நடிகர் சந்தானம். தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் கொடுக்கல் வாங்கல் தகராறில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என முன் ஜாமீன் பெற்றிருந்தார். அதன் பின்பு சந்தானம் மீது போலீஸ் வழக்கு மட்டும் போடப்பட்டிருந்தது.

அருண் விஜய் : தமிழ் சினிமாவில் தரமான கம்பேக் கொடுத்த மீண்டும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் ஒரு முறை போலீஸ் வாகனத்தின் மீது விபத்து ஏற்படுத்தி இருந்தார். இதனால் அந்த வாகனம் மிகுந்த சேதம் அடைந்திருந்தது. இதனால் அருண் விஜய் மீது வழக்கு போடப்பட்டு இருந்தது.

Trending News