வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஸ்டைல், மாஸ் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி ரஜினி நடித்த 5 படங்கள்.. சென்டிமென்டில் கலங்க வைத்த 6-லிருந்து 60-பது வரை

Rajinikanth: ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல்தான். எப்பேர்பட்ட காட்சியாக இருக்கட்டும், பாடலாக இருக்கட்டும் தன்னுடைய ஸ்டைல் மூலம் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

ரஜினிக்கு என்ன கைய கால அசச்சு ஸ்கோர் பண்ணிடுவார் என்பது அவருடைய சமகாலத்து போட்டியாளர்களின் ஏக்கமான ஆதங்கமும் கூட.

ஆனால் இந்த ஸ்டைல் மற்றும் மாஸ் இல்லாமல் முழுக்க முழுக்க ரஜினி கதையை மட்டுமே நம்பி நடித்த படங்களும் இருக்கின்றன. அதில் இருந்து 5 படங்களை பார்க்கலாம்.

கதையை மட்டுமே நம்பி ரஜினி நடித்த 5 படங்கள்

ஸ்ரீ ராகவேந்திரா: ஸ்ரீ ராகவேந்திரா படத்தை ரஜினிகாந்த் தன்னுடைய நூறாவது படமாக தேர்ந்தெடுத்திருந்தார்.

ராகவேந்திரா சுவாமிகள் பிறந்தது முதல் மகா சமாதி அடையும் வரை இந்த படத்தின் கதை நகரும். இந்த படத்தின் ரஜினி ராகவேந்திரா ஸ்வாமிகள் ஆகவே வாழ்ந்திருந்தார்.

ஆறிலிருந்து அறுபது வரை: வீட்டுக்கு மூத்த பிள்ளையாக மொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர். தம்பிகள் மற்றும் தங்கையை நல்ல நிலைமையில் ஆளாக்கி விடுவார்.

ஆனால் இவர் பொருளாதாரத்தால் கஷ்டப்படும் போது அவர்கள் எட்டி கூட பார்க்க மாட்டார்கள். வறுமையின் பிடியில் மனைவி மற்றும் குழந்தைகளை வைத்து போராடும் கேரக்டர்.

இந்த படத்தை பார்க்கும் பொழுது சந்தானம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பது ரஜினி என்பதை நமக்கு மறந்துவிடும்.

கை கொடுக்கும் கை: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜயகுமார் தயாரிக்க ரஜினி நடித்த படம் தான் கை கொடுக்கும் கை.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வரும் ரேவதிக்கு கண் பார்வை தெரியாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர் மானபங்கப்படுத்தப்படுவதும், அதன் பின்னர் நகரும் கதை சூழல் தான் இந்த படம்.

முள்ளும் மலரும்: ரெண்டு கையும், ரெண்டு காலும் இல்லனாலும் பொழச்சு பார் சார் இந்த காளி.

இந்த வசனமே இந்த படத்தின் மிகப்பெரிய அடையாளம். ரஜினிகாந்த் என்பதைத் தாண்டி இயக்குனர் மகேந்திரனின் காளியாக இந்த படத்தில் ரஜினி வாழ்ந்திருப்பார்.

வள்ளி: ரஜினிகாந்த் கதை எழுது தயாரித்து நடித்த படம் தான் வள்ளி. இந்த படத்தில் வீரையன் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.

படம் முழுக்க வரும் ஒரு கௌரவத் தோற்றம். வயதான கேரக்டரில் தன்னுடைய ஆஸ்தான ஸ்டைல் மற்றும் மாஸ் எதுவும் இல்லாமல் நடித்திருப்பார்.

- Advertisement -

Trending News