புதன்கிழமை, ஜனவரி 15, 2025

யோகி பாபு ஹீரோவாக மாஸ் காட்டிய 6 படங்கள்.. 15 வருட சினிமா பயணத்தில் சேர்த்த சொத்து மதிப்பு

Yogi Babu: ஒரு நேரத்தில் நகைச்சுவை நடிகர் என்றால் அதற்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் காமெடி நடிகராக வலம் வருவார்கள். ஆனால் இப்பொழுது காமெடி கதாபாத்திரத்தில் உள்ளே நுழைந்து மக்கள் மத்தியில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக கதையின் நாயகனாக மாறிக்கொண்டு நடித்து வருகிறார்கள். அப்படித்தான் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நுழைந்து தற்போது சில படங்களின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

ஆனாலும் முன்னணி ஹீரோக்கள் படங்களில் இவருடைய காமெடி இல்லாமல் இருக்காது என்று சொல்வதற்கு ஏற்ப அனைத்து படங்களிலும் நடிப்பை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரே காமெடி நடிகர் இவர்தான். சின்னத்திரையில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி ரஜினி, விஜய் சேதுபதி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையாக நடித்து குணச்சித்திர கேரக்டரிலும் அசத்தி வருகிறார்.

15 வருடங்களில் யோகி பாபு சேர்த்து சொத்து மதிப்பு

அதிலும் இவருடைய நடிப்பில் மறக்க முடியாத சில படங்களான மண்டேலா, கூர்கா, தர்ம பிரபு, ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, லக்கி மேன் போன்ற படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று இருக்கிறது. அப்படிப்பட்ட இவர் இன்று 39 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக இவரை வளர்த்துக் கொண்டு தற்போது கோடிக்கணக்கில் சொத்தை சேர்த்து கோடீஸ்வரர்களில் ஒருவராக வந்து விட்டார்.

அதிலும் நடிக்க வந்த போது இவருடைய உருவத்தையும் பேச்சையும் பார்த்து கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தியவர்கள் தான் அதிகம். ஆனால் அதை எல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் திறமையை வளர்த்துக் கொண்டு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

அந்த வகையில் சினிமாவிற்கு நுழைந்து 15 வருடம் ஆன நிலையில் இதுவரை 50 கோடி முதல் 70 கோடி வரை சொத்துக்களை சேர்த்து வைத்து இருக்கிறார். அத்துடன் ஒரு படத்திற்காக 1 கோடி முதல் 2 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

அத்துடன் சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. இதை தவிர சமீபத்தில் புதிதாக வீடு ஒன்று கட்டி இருக்கிறார். மேலும் வீட்டில் மூன்று சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். இவருக்கு சொந்த ஊரிலும் வீடு, நிலம் போன்ற சொத்து வசதிகளை சேர்த்து வைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் போட், கஜானா, கோட், கங்குவா, அந்தகன், மெடிக்கல் மிராக்கள் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்தார்.

பிசியாக நடித்து வரும் யோகி பாபு

Trending News