திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தமிழ் டப்பிங்கில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 6 மலையாள படங்கள்.. பயமுறுத்திய ‘புருஷ பிரேதம்’

6 must watch tamil dubbed malayalam movies: மலையாள படங்கள் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே அதிக ஈர்ப்பு உண்டு. மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு படங்கள் வந்த பிறகு இன்னுமே மலையாள படங்கள் பார்ப்பதற்கு தமிழ் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் எழுந்து வருகிறது. நல்ல பீல் குட் மலையாள படங்கள் பார்க்க வேண்டும் என்பவர்கள் இந்த ஆறு படத்தை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்த்து விட வேண்டும்.

புருஷ பிரேதம்: இரண்டு மணி நேரம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி, கடைசி அரை மணி நேரம் சீட்டின் நிலையில் உட்கார வைக்கும் அளவுக்கு த்ரில்லர். இப்படி ஒரு படத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள். காமெடி பீஸ் ஆக இருக்கும் போலீஸ்காரர் ஒருவர் எல்லாம் தெரிஞ்சது போல் ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பார்.

அனாதை பிணங்களை ஏழு நாட்களுக்குப் பிறகும் யாரும் உரிமை கோராவிட்டால் காவல்துறை தரப்பிலிருந்து அந்த பிணங்கள் எரிக்கப்பட்டு விடும். அப்படி எரித்த ஒரு பிணத்தின் மனைவி என்று திடீரென ஒரு பெண் உரிமை கொண்டாட வருவார். அவர் அந்த இறந்தவரின் மனைவி இல்லை என்பதை அந்த போலீஸ்காரர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

பூதக்காலம்: படத்தில் வரும் ஐந்து ஆறு கேரக்டர்கள் தான். மொத்தம் ஒன்னே முக்கால் மணி நேரம். பொறுமையும் அதே நேரத்தில் திகில் படத்தை பார்க்க வேண்டும் என ஆர்வமும் இருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த சாய்ஸ்.

ஆஷா என்னும் கேரக்டரில் ரேவதி, அவருக்கு பக்கவாதத்தில் படுத்திருக்கும் ஒரு தாய், மற்றும் படித்து வேலை இல்லாத மகன். திடீரென ஆஷாவின் அம்மா இறந்த பிறகு வீட்டில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் தான் இந்த படத்தின் கதை.

திங்கலஞ்ச நிச்சயம்: கேரள மாநிலத்தின் மலபார் பகுதியில் உள்ள ஒரு எளிமையான வீட்டில் நடப்பதை கண் முன் காட்டுவது தான் இந்த படம். மூத்த மகள் வீட்டை எதிர்த்து ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறாள். அதனால் அந்த குடும்பத் தலைவன் மூத்த பெண் ஓடிய அவமானத்தை துடைக்க இரண்டாவது பெண்ணிற்கு ஒரு NRI மாப்பிள்ளையை தேர்வு செய்து நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்.

திங்கட்கிழமை நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் வேளையில் வார இறுதி நாளில் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்வது, அதை சுற்றி நடக்கும் எதார்த்தமான கதைக்களம் தான் இந்த படத்தின் கதை.

சுருளி: அறிவியல் மற்றும் திகில் இரண்டும் கலந்த படத்தை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சுருளி சிறந்த சாய்ஸ். தப்பியோட குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு போலீஸ்காரர்கள் சுருளி என்னும் கிராமத்திற்கு வருகிறார்கள். அந்த கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யம், மற்றும் அங்கு வரும் ஏலியன்கள் போன்றவற்றை அவர்கள் உணர்கிறார்கள். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.

‘ஆயிரத்தோன்னு நுணுக்கங்கள்’: திருமண உறவு மற்றும் அதற்குள் இருக்கும் சிக்கல்களை ஒரு எளிமையான விளையாட்டு மூலம் சொல்ல முடியும் என நிரூபித்த படம் தான் இது. நண்பர் ஒருவரின் திருமண நாளை கொண்டாட ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டம் அவர்கள் குடும்பத்துடன் ஒரு மாளிகையில் கூடுகிறது.

அந்த இடத்தில் ட்ரூத் ஆர் டேர் என்னும் விளையாட்டை விளையாடுகிறார்கள். நேரம் போகப் போக ஒரு சிலரின் ரொம்ப அந்தரங்கமான விஷயங்கள் வெளியில் வர ஆரம்பிக்கிறது. இது அவர்களுடைய துணையருக்கு மன அழுத்தத்தை அளிக்கும் விதமாகவும் மாறுகிறது. ஏற்கனவே சண்டையிட்டு முட்டி மோதிக் கொண்டிருக்கும் துணைகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும் வழி செய்கிறது அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.

அந்தாக்சரி: காவல் நிலையத்துக்கு பிரச்சனை என்று வரும் நபர்களை அந்தாக்சரி விளையாட வைத்தே வலக்கை முடித்து வைக்கும் போலீஸ் அதிகாரி. ஒரு கட்டத்தில் மர்ம நபர் ஒருவரிடம் இருந்து அவருடைய மக்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. அதை தொடர்ந்து நடக்கும் திகில் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய மலையாள படங்கள்

Trending News