திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இப்ப வர ரசிகர்கள் வெறுப்பை காட்டாத 6 நடிகர்கள்.. பாசிட்டிவ் வைப்ஸ் மட்டுமே கொடுக்கும் சீயான்

Tamil Cinema Actors: சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தங்களுக்கு என்று பிடித்த ஹீரோவை தவிர அவர்களின் சகப் போட்டியாளராக இருக்கும் ஹீரோக்களை ரோல் செய்வது, அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டுவது என்று சமூக வலைத்தளங்களில் செய்வார்கள். ஆனால் இந்த ஆறு நடிகர்களுக்கு ஹேட்டர்ஸ்கள் என்று இதுவரை யாருமே இருந்ததில்லை. பல தரப்பட்ட ரசிகர்களுக்கும் இவர்கள் பிடித்த பொதுவான ஹீரோக்களாக இருக்கிறார்கள்.

பிரபு: 90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் தான் இளைய திலகம் பிரபு. இவருக்கு அந்த காலகட்டத்தில் இருந்தே ரஜினி மற்றும் கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது. எந்த ஈகோவும் பார்க்காமல் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் பிரபு இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

Also Read:வந்தியதேவனை ஓவர்டேக் செய்த அருள்மொழி வர்மன்.. 3 ஹீரோயின்களுடன் உருவாகும் அடுத்த படம்

அரவிந்த்சாமி: தளபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அரவிந்த்சாமி, ரோஜா திரைப்படத்தினால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ஹீரோவாக இருக்கும்பொழுது சரி, தற்போது ரீஎன்ட்ரியில் மாஸாக கலக்கிக் கொண்டிருக்கும் போதும் சரி இவர் எல்லா விதமான ரசிகர்களாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

மாதவன்: இயக்குனர் மணிரத்தினத்தின் அழகிய காதல் காவியமான அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் மாதவன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்தும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் சாக்லேட் ஹீரோவாக இவர் இருக்கிறார். இந்திய மொழிகளில் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இவருக்கென்று தனிப்பட்ட வரவேற்பு உண்டு.

Also Read:23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.. வொர்க் அவுட் ஆகுமா இந்த கெமிஸ்ட்ரி

ஜெயம் ரவி: கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார் ஜெயம் ரவி. இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் தனிப்பட்ட முறையில் இருந்தாலும், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் ஆதரவும் இவருக்கு இருக்கிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த அருள்மொழிவர்மன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர்யா: கமலஹாசன் மற்றும் மாதவன் வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்த சாக்லேட் பாய் ஹீரோவாக ரசிக்கப்படுபவர் நடிகர் ஆர்யா. ஜாலியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை போன்ற சீரியஸ் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் இவர். ஆர்யாவுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

விக்ரம்: கடின உழைப்பிற்கு உதாரணமாக பார்க்கப்படும் நடிகர், சீயான் விக்ரம் தான். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் போன்றோரின் ரசிகர்களுக்கும் விக்ரம் மிகப் பிடித்த நடிகராக இருக்கிறார். எங்கு சென்றாலும் தன்னால் முடிந்தவரை இவர் பரப்பும் பாசிட்டிவ் வைப் தான் அதற்கு காரணம்.

Also Read:தாறுமாறாக சம்பளத்தை கேட்ட ஜெயம் ரவி பட இயக்குனர்.. இதுக்கு ஐடி ரைடே பரவாயில்லை தலை தெறிக்க ஓடிய லைக்கா

 

Trending News