Own Business: நம்மில் பலருக்கு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எந்த மாதிரியான தொழில் தொடங்குவது, போட்ட காசை எடுக்க முடியுமா என்ற பயம் அந்த ஆசையை விட அதிகமாக இருக்கும். இதனாலேயே பலரும் சொந்த தொழில் தொடங்கும் பிளானை கிடப்பில் போட்டுவிட்டு மாத சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் எப்படிப்பட்ட தொழிலை தொடங்குவது என்று தெரியவில்லையா. அப்போ கண்டிப்பா இந்த செய்தியை முழுசா படிச்சு முடிங்க. ஒரு ஐடியா கிடைக்கும்.
இந்தியாவில் அதிக லாபம் தரும் 6 தொழில்கள்
கிளவுட் கிட்சன்: அதிக லாபம் தரும் தொழில்களில் கிளவுட் கிச்சன் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த தொழிலில் 30 முதல் 40 சதவீதம் லாபம் கை மேல் கிடைக்கிறது. 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த கிளவுட் கிச்சனின் பயன்பாடு அதிகமாகி இருக்கிறது. ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது என்பதை தாண்டி ஆன்லைனில் உணவுகளை டெலிவரி செய்வது தான் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அதிகமாக சந்தைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தான் இந்த தொழில் முதலிடத்தில் இருக்கிறது.
கல்வி தொழில்நுட்பம்: அதிக லாபம் தரும் தொழில்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது கல்வி தொழில் நுட்பம். போட்ட முதலில் கிட்டத்தட்ட 25 முதல் 35 சதவீதம் லாபத்தை இந்த தொழில் கொடுக்கிறது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது, பாட சம்பந்தமான மெட்டீரியல்கள் விற்பனை செய்வது இந்த தொழிலில் அடங்கும்.
வேஸ்ட் மேனேஜ்மேண்ட்: திடக்கழிவு மேலாண்மை வணிகம் அதிக லாபம் தரும் தொழில்களில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த தொழிலில் 20 முதல் 30 சதவீதம் வரை லாபம் பார்க்கலாம். திடக்கழிவுகளை சேகரிப்பது, அதை மறுசுழற்சி செய்வது, சரியான முறையில் அகற்றுவது இந்த தொழிலில் அடங்கும்.
ஆர்கானிக் வேளாண்மை: கலப்படமில்லாத பொருட்களுக்கு இப்போது இந்தியாவில் அதிக டிமாண்ட் ஆகிவிட்டது. ஆர்கானிக் என்ற பெயரை சொல்லிவிட்டாலே எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் அந்த பொருளை வாங்க தயாராக இருக்கிறார்கள். இரசாயன உரங்கள் மற்றும், பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாத உணவு வகைகளை பயிரிடும் தொழில் இந்தியாவில் அதிக லாபத்தை தருகிறது. கிட்டத்தட்ட 15 சதவீதம் முதல் 20% வரை இதன் லாப விகிதம் இருக்கிறது.
ஈ-காமர்ஸ்: ஆன்லைனில் பொருட்களை விற்கும் தொழிலை 10 முதல் 15 சதவீதம் வரை லாபம் பார்க்கலாம். மொத்த விலையில் பொருட்களை வாங்கி சமூக வலைத்தளங்கள் மூலம் ஆர்டர்கள் பிடித்து விற்பனை செய்யும் இந்த தொழிலுக்கு இந்தியாவில் தற்போது அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஹெல்த்கேர் & பாராமெடிகள்: ஹெல்த்கேர் & பாராமெடிகள் லாப சதவீதம் 15 முதல் 25 ஆக இருக்கிறது. குறிப்பிட்ட நோய்க்கான மருந்துகளை கண்டுபிடிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது தான் இந்தத் தொழிலின் நோக்கம்.