செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

போலீஸ் வேடத்தில் பட்டையை கிளப்பிய ரஜினியின் 6 படங்கள்.. ஏகாம்பரத்தை வெளுத்து வாங்கிய அலெக்ஸ் பாண்டியன்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், போலீஸ் கதாபாத்திரங்களில் தனது கெத்தான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் இவருடைய தனித்துவமான ஸ்டைல், நடை, டயலாக் போன்றவற்றின் மூலம் ஸ்டைலிஷ் போலீஸாகவே மாறியுள்ளார். இப்படியாக இவர் போலீஸ் வேடத்தில் பட்டையை கிளப்பிய 6 படங்களை இங்கு காணலாம்.

கொடி பறக்குது: பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு அதிரடியான திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த் உடன் அமலா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படத்தில் ஈரோடு சிவகிரி என்னும் போலீஸ் கதாபாத்திரத்தில் சேர்ந்துள்ளார். அதிலும் போதைப்பொருள் கடத்தும் ஆசாமிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து மாஸ் காட்டியுள்ளார்.

Also Read: நெகட்டிவ் ரோலில் தெறிக்கவிட்ட ரஜினியின் 5 படங்கள்.. புது அவதாரம் கொடுத்த மூன்று முடிச்சு

பாண்டியன்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த திரைப்படம் பாண்டியன். இதில் ரஜினிகாந்த் உடன் குஷ்பூ இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆயுதங்கள் கடத்தும் ரவுடிகளை அடித்து தும்சம் செய்து தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்று முகம்: 1982 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஆகும். இதில் அலெக்ஸ் பாண்டியன் என்னும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் அட்டூழியம் செய்யும் ஏகாம்பரத்தை வெளுத்து வாங்கி தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: ரஜினியால், மகன்களையும் ஒதுக்கும் தனுஷ்.. விவாகரத்திற்கு பின்னும் நிம்மதி இல்லாமல் தவிப்பு

நாட்டுக்கொரு நல்லவன்: இயக்குனர் வி.ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜூஹி சாவ்லா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும்.  இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சுபாஷ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

அன்புக்கு நான் அடிமை: 1980 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் தியாகராஜன் இயக்கத்தில் தண்டாயுதபாணி தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் குற்ற தொழிலில் ஈடுபடுபவர்களை வெளுத்து வாங்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

தர்பார்: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தர்பார். இதில் மும்பை போலீஸ் கமிஷனர் ஆக ஆதித்ய அருணாச்சலம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை என்கவுண்டரில் கொன்று குவிக்கும் அதிகாரியாக நடித்துள்ளார்.

Also Read: சூப்பர் ஸ்டார் சம்பளத்தில் கிள்ளி கொடுத்த சன் பிக்சர்ஸ்.. ஜெயிலர் படத்தில் விஜய் வில்லன் வாங்கிய சம்பளம்

Trending News