வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிஜ வாழ்க்கையிலும் பிளேபாயாகவே சுற்றி திரியும் 6 நடிகர்கள்.. முன்னணி ஹீரோயின்களை கழட்டிவிட்ட சித்தார்த்

Play boy Tamil Heroes: சினிமாவில் அழகிற்காகவும், ஹீரோயின்களுடன் கெமிஸ்ட்ரிகாகவும் நடிகர்களை காதல் மன்னன் என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த ஆறு நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னன் ஆகவே வலம் வருகிறார்கள். எந்த படத்தில் நடித்தாலும் உடன் நடிக்கும் நடிகைகளுடன் அதிகமாக கிசுகிசுக்கப்படுபவர்களும் இவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் நிறைய கிசுகிசு உண்மையிலேயே ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சித்தார்த்: பாய்ஸ் மற்றும் ஆயுத எழுத்து திரைப்படங்களுக்கு பிறகு பாலிவுட் சென்ற சித்தார்த் அங்கு தன்னுடைய காதல் விளையாட்டை காட்ட, அவருடைய மனைவி அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் நடிகை சமந்தாவுடன் திருமணம் வரை சென்று பிரேக்கப் ஆனது. ஸ்ருதிஹாசன் உடனும் இவர் காதலில் இருந்தார். தற்போது நடிகை அதிதியை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Also Read:சிலுக்கின் காதல் வலையில் சிக்கிய 4 பிரபலங்கள்.. தாடிக்காரரால் மரணத்தை தழுவிய சோகம்

விஷால்: நடிகர் விஷால் முதலில் வரலட்சுமி சரத்குமாரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் லட்சுமி மேனன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த துணை நடிகை ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த பின் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் நடிகை ஸ்ரீரெட்டி தன்னை ஏமாற்றிய நடிகர்களின் லிஸ்டில் விஷாலையும் சேர்த்து சொன்னார்.

அதர்வா: சினிமாவில் கதாநாயகிகளை தொட்டு கூட நடிக்காதவர் நடிகர் முரளி. ஆனால் அதர்வா முரளி இது போன்ற விஷயங்களில் பிளேபாய் என்று சொல்லப்படுகிறது. முதலில் நடிகர் பிரியா ஆனந்துடன் வெளியில் அதிகமாக சுற்றிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் அவருடன் நடிக்கும் நடிகைகள் எல்லோருடனும் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

தனுஷ்: நடிகர் தனுஷ் மீது திருமணத்திற்கு முன்பு வரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்ததில்லை. திருமணத்திற்கு பின்னரும் அப்படிதான் மெயின்டைன் செய்து வந்தார். ஆனால் 3 திரைப்படத்திற்கு பிறகு இவருடைய பெயர் மொத்தமாக காலி ஆகிவிட்டது. நடிகைகள் ஸ்ருதிஹாசன், அமலா பாலுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட இவரை பற்றி பாடகி சுசித்ரா ட்வீட் மற்றும் புகைப்படங்கள் இவர் ஒரு பிளேபாய் என்பதை உறுதி செய்தது.

Also Read:2ம் திருமணத்திற்கு அடி போட்ட ஐஸ்வர்யா.. என்னடா வாழ்க்கை இது என மாலத்தீவு கிளம்பிய ரஜினி

சிம்பு: நடிகர் சிம்புவின் காதல் கதைகள் எப்போதுமே வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியக்கூடிய ஒன்றுதான். ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இவர் காதலித்ததாக பல வருடங்களுக்கு முன்பில் இருந்து சொல்லப்பட்டது. பின்பு நயன்தாராவுடன் ஆன காதல் மற்றும் ஹன்சிகா உடனான காதல் எல்லாம் பிரேக்கப்பில் முடிந்தது. 40 வயதை நெருங்கியும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

ஆர்யா : கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர் ஆர்யா. சொந்த வாழ்க்கையிலுமே இவர் அப்படிதான். நடிகைகள் நிலா, பூஜா மற்றும் நயன்தாராவுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார். மேலும் லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்திருந்தார். தற்போது இவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

Also Read:மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

Trending News