வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நடிக்கும் போதே காதலில் விழுந்த நிஜமான 6 ஜோடிகள்.. நவரச நாயகனையே எதிர்த்து வாரிசு ஆடிய திருவிளையாடல்

நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் போதே காதலில் விழுந்த நிஜமான 6 காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு ரசிகர்களையும் குதூகலப்படுத்தி உள்ளனர். அதிலும் நவரச நாயகனையே எதிர்த்து அவருடைய வாரிசு ஆடிய திருவிளையாடல் கடைசியில் திருமணத்தில் முடிந்தது.

அஜித்- ஷாலினி: தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்,1999 ஆம் ஆண்டு ஹீரோவாக நடித்த அமர்க்களம் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினியை காதலித்து, ஷூட்டிங் ஸ்பாட்டிலே தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். ஷாலினியும் அஜித்தின் தீவிர ரசிகை என்பதால் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இப்போது வரை எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்படாமல் நட்சத்திர தம்பதியர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

சூர்யா- ஜோதிகா: கோலிவுட்டின் எவர்கிரீன் நட்சத்திர தம்பதியர்களாக இருக்கும் சூர்யா- ஜோதிகா இருவரும் இப்போது வரை எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் தங்களுடைய ரசிகர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தாலும், அதன் பிறகு 2003ம் ஆண்டு இருவரும் சேர்ந்து நடித்த காக்க காக்க என்ற படத்தில் நடித்த பிறகு தங்களது காதலை வெளிப்படுத்தி, 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த சில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் இருவருக்கும் ஆன கெமிஸ்ட்ரி அல்டிமேட் ஆக இருந்தது.

Also Read: அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே கொடுத்த பிளாக்பஸ்டர்

ஆதி- நிக்கி கல்ராணி: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிசயமான நடிகர் ஆதி, 2013ம் ஆண்டு வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை நிக்கி கல்ராணியை காதலிக்க ஆரம்பித்தார். ஆதியின் காதலை ஏற்ற நிக்கி கல்ராணி சுமார் 7 ஆண்டுகளாக அவருடன் டேட்டிங் செய்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன்: அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் என்ற ஃபேன்டஸி அதிரடி திரில்லர் படத்தில் தான் பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனன் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் நடிக்கும் போதே இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு சில காலம் டேட்டிங் செய்து வந்தனர். அதன் பின் 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன்: 80களில் காதல் இளவரசனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த நவரச நாயகன் கார்த்திக்கின் வாரிசான கௌதம் கார்த்திக் அவரை விட காதல் சமாச்சாரத்தில் திருவிளையாடல் ஆடி இருக்கிறார். ஏனென்றால் கௌதம் கார்த்திக் மஞ்சுமா மோகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்திலிருந்தே காதலிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதற்கு கார்த்திக் முதலில் சம்மதிக்கவில்லை. அதன் பிறகு கௌதம் கார்த்திக் போட்ட திருவிளையாடலால் அவரும் ஒத்துக் கொண்டார். அதன் பின் இதைப் பற்றி மீடியாவிடம் வெளிப்படையாக சொன்ன கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் காதல் ஜோடி, கடந்த ஆண்டு இறுதியில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Also Read: கூச்சநாச்சமே இல்லாம வெளிவந்த ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. கேரியரையே தொலைத்த கௌதம் கார்த்திக்

ஆர்யா- சாயிஷா: கோலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து தன்னுடைய ஜாலியான நடிப்பின் மூலம் நிறைய ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் புது முகமான அறிமுகமாய் இருந்த சாயிஷாவுடன் இணைந்து கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அதை தொடர்ந்து மற்றொரு படத்திலும் இருவரும் ஒப்பந்தம் ஆனார்கள்.

அந்த காலகட்டத்தில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறினார்கள். அது மட்டுமல்ல காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். ஆனால் இவர்களுக்கிடையே 16 வயது வித்தியாசம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் சாயிஷா தன்னைவிட மூத்தவராக இருந்த ஆர்யாவை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Also Read: பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

இவ்வாறு இந்த 6 நட்சத்திர காதல் தம்பதியர்கள் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து நடிக்கும் போது காதல் வயப்பட்டு அது கடைசியில் திருமணத்தில் முடிந்தது. இருப்பினும் இவர்கள் அனைவரும் தங்களது திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதால், ரசிகர்களும் அதை பார்த்து மேலும் சந்தோஷப்படுகின்றனர்.

Trending News