ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடிய சோகமான காதல் 6 படங்கள்.. த்ரிஷா பின்னாடி அலைந்தும் சேராமல் போன சிம்பு

Love Failure Movies: எப்பொழுதுமே காதல் என்றாலே அதற்கு ஒரு தனித்துவமான உணர்வுகள் இருக்கும். சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒத்துப் போகும் அளவிற்கு ரசிக்க வைக்க கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட காதல் சினிமாவில் ஒன்று சேராமல் போவதை எதார்த்தமான படங்களாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவிற்கு கதை அமைந்திருக்கும். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

காதல் கொண்டேன்: செல்வராகவன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், சோனியா அகர்வால், சுதீப் சாரங்கி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷ் பாசத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மொத்த அன்பையும் காட்டும் சோனியா அகர்வால் மீது ஒருதலையாக காதலை வைத்திருப்பார். ஆனால் இவருடைய காதலை புரிந்து கொள்ளாமல் இவரை தன்னந்தனியாக தவிக்க விட்டுவிடுவார். இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சி சோகமான ஒரு வருத்தத்தை கொடுத்திருக்கும். அத்துடன் இப்படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சளிப்பு ஏற்படாது.

Also read: வளர்ந்த பிறகு வாலாட்டனும்னு நினைத்த தனுஷ்.. ஒத்த வார்த்தையில் சர்வத்தையும் அடக்கிய ஹீரோ

சேது: இயக்குனர் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமன் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம் முரட்டுத்தனமான கல்லூரி மாணவராக இருப்பார். அந்த நேரத்தில் இவர் அபிதா மீது காதல் வயப்பட்டு வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் சில பிரச்சனைகளால் இவருடைய மனநிலை பாதிக்கப்பட்டு காதலில் ஒன்று சேர முடியாமல் சோகத்தில் முடிந்துவிடும். இப்படம் தான் இவருடைய கேரியரே புரட்டிப் போட்ட படமாக அமைந்தது.

மதராசபட்டினம்: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு மதராசபட்டினம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது வெளிநாட்டுப் பெண்ணாக வரும் எமி ஜான்சனுக்கும் சலவை தொழிலாளியாக இருக்கும் ஆர்யாவிற்கும் காதல் ஏற்படும். ஆனால் இவர்கள் காதல் கடைசியில் ஒன்று சேராமல் போய்விடும். இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய படமாக மக்களை ஈர்த்த கதையாக இருக்கும்.

Also read: தனுஷ், சிம்பு வேண்டவே வேண்டாம்.. ரீமேக் படங்களை ஒதுக்கி 27 அவார்டுகளை குவித்த இயக்குனர்

96: பிரேம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு 96 திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு காதல் காவிய படமாக மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் காதல் ஒன்று சேராமல் எல்லோரையும் உணர்வுபூர்வமாக அவர்களுடைய முதல் காதலை நினைவூட்டும் வகையாக இப்படம் ஒருவித உணர்வை அளித்திருக்கும். என்றைக்கும் காலத்தால் அழியாத காவியமாக இப்படம் நிலைத்திருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வின்னைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிம்பு, திரிஷா, வி.டிவி கணேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் எதார்த்தமான காதல் கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் கார்த்திக் ஜெஸ்ஸியை தேடி தேடிப் போய் காதலிப்பார்.  ஆனால் ஒன்று சேர முடியாமல் பிரிந்து போய்விடுவார்கள். இவர்களின் காதல் நினைவுகளை நமக்கு எப்போதும் ஞாபகப்படுத்தும் அளவிற்கு இருக்கும்.

மௌனம் பேசியதே: இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சூர்யா, த்ரிஷா, நந்தா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் காதலே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிய சூர்யாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக த்ரிஷாவின் மீது காதல் ஏற்படும். ஆனால் அவரோ வேறொருவரை காதலிப்பது போல் கதை அமைந்திருக்கும். இதனால் சூர்யாவின் காதல் நிராசையாக போய்விடும். இப்படம் சூர்யாவுக்கு லவ் பெயிலியர் ஆக இருந்தாலும் கடைசியில் லைலாவுடன் சேர்ந்து சந்தோஷமான ஒரு கிளைமேக்ஸ் வந்திருக்கும். இப்படம் எத்தனை முறை டிவியில் போட்டாலும் ஒரு சீன் கூட மிஸ் பண்ணாம பார்க்கும் அளவிற்கு கதை அமைந்திருக்கும்.

Also read: சிம்புவை தூக்கிவிட படாத பாடுபடும் கமல்.. செஞ்ச சத்தியத்தை காப்பாற்றும் ஆண்டவர்

Trending News