செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

டிஆர்பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய 6 சீரியல்கள்.. சிறகடிக்கும் ஆசை சீரியலை தும்சம் பண்ணிய சன் டிவி

Serial TRP Rating: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எந்த கதை விறுவிறுப்பாகவும், பார்ப்பதற்கு ஆர்வமாகவும் என்பதை வைத்து அந்த நாடகத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை கவர்ந்த சீரியல் எது என்பதை டிஆர்பி ரேட்டிங் மூலம் பார்த்து வருகிறோம். அப்படி இந்த வாரம் எந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

மல்லி: வெண்பாவிற்காக விஜய்யை மல்லி கல்யாணம் பண்ணி இருந்தாலும் மல்லி மனதிற்குள் விஜய் நுழைந்து விட்டார். அந்த வகையில் மல்லி, விஜய்யின் காதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது மல்லி பூரணமாக குணமாக வேண்டும் என்பதால் விஜய் பக்கத்திலே இருந்து பார்த்து பார்த்து பாசத்துடன் கவனித்து வருகிறார்.

ஆனால் மல்லிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் விஜய் இதையெல்லாம் செய்து கொண்டு வருகிறார். இது தெரியாத மல்லி, விஜய்யை கண்மூடித்தனமாக காதலித்து வருகிறார். தற்போது இந்த நாடகம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருப்பதால் டிஆர்பி ரேட்டிங்கில் 7.52 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தை பெற்றிருக்கிறது.

வந்த வேகத்திலேயே மூன்றாவது இடத்தை பிடித்த நந்தினி

சிறகடிக்கும் ஆசை: ஆரம்பத்தில் இந்த நாடகம் மக்களின் மிகப்பெரிய ஃபேவரிட் நாடகமாக இருந்தது. ஆனால் வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்று சொல்வதற்கு ஏற்ப முத்து மற்றும் மீனாவை டம்மி ஆகிவிட்டு ரோகிணி ஒவ்வொரு விஷயத்திலும் எஸ்கேப் ஆகி கொண்டு வருவதால் மக்கள் இந்த நாடகத்தை வெறுத்துப் போய் விட்டார்கள். அதனால் கூடிய விரைவில் ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவந்தால் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். தற்போது 7.95 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: ஆதிரை மற்றும் பிரபு ஒன்று சேர்ந்து வேல்விழி மற்றும் மனோகரிக்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் விதமாக கதைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் யார் நினைத்தாலும் கல்யாணத்தை நிறுத்த முடியாது என்பதற்கு ஏற்ப ஆதிரை மனதிற்குள் பிரபுவும், பிரபுவுக்கு ஏற்ற மனைவி ஆதிரை தான் என்று சொல்வதற்கு ஏற்ப பிரபு மனதில் இடம் பிடித்து விட்டார். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.02 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: கடந்த வாரம் தான் இந்த நாடகம் ஆரம்பித்தது, ஆனால் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் 8.16 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்து விட்டது. நந்தினியின் துணிச்சலான பேச்சும் குடும்பத்தையும் கிராமத்தையும் பாதுகாக்கும் வகையில் நந்தினி கேரக்டர் அனைவரையும் கவர்ந்து விட்டது.

சிங்கப் பெண்ணே: போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என்று சொல்வதற்கு ஏற்ப ஆனந்தியை, அன்பு மற்றும் மகேஷ் விரும்பி வந்தாலும் இவர்கள் இருவருமே அவர்களுடைய காதலை வெளிப்படுத்தாமல் மௌனம் காத்து இருப்பது பார்ப்பவர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது. அதிலும் கண்ணாமூச்சி விளையாடும் அளவிற்கு அன்பு, அழகன் என்ற பெயரில் ஆனந்தி மனதில் இடத்தை பிடித்திருந்தாலும் அழகன் நான்தான் என்று சொல்லாமல் இருப்பது கடுப்பாக இருக்கிறது. அதனால் தான் இந்த வாரம் 8.77 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: இதுவரை இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த கயல் சீரியல் முதல் முறையாக 8.91 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அதற்கு காரணம் சீறிப்பாயும் சிங்க பெண்ணாக இருந்த கயல் கடந்த சில வாரங்களாக அமைதியின் மறு உருவமாக எதிரிகளை தன் பக்கம் இழுக்கும் சாகசத்துடன் பொறுமையாக ஒவ்வொரு காயா நகர்த்தி வருகிறார். அந்த வகையில் ராஜி மற்றும் வேதவள்ளியின் மாற்றம் கயலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டது.

Trending News