வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஐட்டம் டான்ஸராக ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி ஆட்டம் போட்ட 6 பாடல்கள்.. கண்ணுக்குள்ளே நிற்கும் ஆட்டமா தேரோட்டமா

Actress Ramya Krishnan: பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் ராஜாமாதா என செல்லமாக அழைக்கப்படும் ரம்யா கிருஷ்ணன் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பிற மொழிகளிலும் கடந்த 30 வருடங்களாக ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நுழையும் போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு தான் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ரம்யா கிருஷ்ணன் ஐட்டம் டான்சராக 6 படங்களில் குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அவை எவை என்பதை பார்ப்போம்.

கேப்டன் பிரபாகரன் – ஆட்டமா தேரோட்டம்: 1991 ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் 100வது படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்திற்கு பிறகு தான் விஜயகாந்த்தை ரசிகர்கள் கேப்டன் என்று அழைக்க தொடங்கினர். இதில் விஜயகாந்த் உடன் சரத்குமார், எம்என் நம்பியார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் கேப்டன் பிரபாகரன் ஆக விஜயகாந்த், சத்தியமங்கலத்தில் இருக்கும் மக்களை சித்திரவதை செய்யும் வீரபத்ரனை பிடிக்கும் ஐபிஎஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்திருப்பார். பிரபாகரன் வீரபத்திரனை பிடிக்கப் போவது மட்டுமல்லாமல் அவரது நண்பரான சரத்குமார், ராஜாராமன் என்ற கதாபாத்திரத்தில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவருடைய மரணத்திற்கு பழிவாங்க பிரபாகரன் துடி துடித்துக் கொண்டிருந்தார்.

இதில் சரத்குமாரின் காதலியாக ரம்யா கிருஷ்ணன், பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பூங்கொடி வீரபத்ரனை அவருடைய கூட்டாளிகளுடன் கையும் களவுமாக பிடிப்பதற்காக ஐட்டம் டான்சர் போல் வேடம் அணிந்து ஆடிய பாடல் தான் ‘ஆட்டமா தேரோட்டமா’ சாங். இந்தப் பாடல் செம ஹிட் ஆனது. இதில் இவர் இடுப்பை வெட்டி ஆடிய ஆட்டம் இளசுகளை வசியம் செய்யும் அளவிற்கு இருக்கும். துப்பாக்கியும் கையுமாக இருக்கும் தீவிரவாத கும்பலை தன்னுடைய ஆட்டத்தால் வசியம் செய்து போலீஸ் இடம் ரம்யா கிருஷ்ணன் சிக்கா வைத்திருப்பார்.

Also Read: குணச்சித்திர கேரக்டரில் வெற்றி கண்ட வடிவேலுவின் 5 படங்கள்.. உடன்பிறப்பிற்காக உயிரையே விட்ட ஹீரோ

குத்து – போட்டுத் தாக்கு: என்னா ஸ்ட்ரக்சர் என சொல்லும் அளவுக்கு கிளாமரான உடையில் ரம்யா கிருஷ்ணன் மரண குத்தாட்டம் ஆடிய பாடல் தான் ‘போட்டுத் தாக்கு’. இந்த பாடல் சிம்பு நடிப்பில் வெளியான குத்து என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலில் சிம்புவுக்கு இணையாக ரம்யா கிருஷ்ணனும் எனர்ஜி குறையாமல் குத்தாட்டம் போட்டு இளசுகளை திணறடித்திருப்பார்.

காக்க காக்க – தூது வருமா: பக்கா ஐட்டம் டான்ஸராக ரம்யா கிருஷ்ணன் ஆடிய பாடல் தான் காக்க காக்க படத்தில் இடம்பெற்ற ‘தூது வருமா’ சாங். இந்தப் படத்தில் இவர் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை பார்த்தாலே தண்ணி அடிக்காமலே போதை ஏறும். அந்த அளவிற்கு ஹாட்டான லுக் உடன் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருப்பார்.

Also Read: நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

நரசிம்மா – லாலா நந்தலாலா: ரம்யா கிருஷ்ணா கிளாமர் தூக்கலாக உடையில் ஈரம் சொட்ட சொட்ட தண்ணீருக்குள் முங்கி எழுந்து ஐட்டம் டான்ஸராக நரசிம்மா படத்தில் இடம்பெற்ற ‘லாலா நந்தலாலா’ என்ற பாடலுக்கு ஆடியிருப்பார். இந்தப் பாடலில் கேரளத்து ஓமன குட்டி போலவே உடை அணிந்து தன்னுடைய மேல் அழகையும் இடையழகையும் காண்பித்து, குதித்து குதித்து ஆடி இளசுகளை சுண்டி இழுத்திருப்பார்.

ஜூலி கணபதி – தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு: ஜெயராம், சரிதா நடிப்பில் வெளியான ஜூலி கணபதி என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு’ என்ற பாடலில் ரம்யா கிருஷ்ணன் பக்கா ஐட்டம் டான்சராகவே ஆடி இருப்பார். பாடல் முழுக்க கருப்பு நிற உடையில் ஆற்றில் முங்கி முங்கி தண்ணி சொட்ட சொட்ட ஆடி இருப்பார். இந்தப் பாடலை பார்த்த இளைஞர்கள் ராத்தூக்கம் கெட்டு பல நாள் தவித்ததுண்டு.

Also Read: நீலாம்பரியாக நடிக்க இருந்த 2 கதாநாயகிகள்.. கேஎஸ் ரவிக்குமார் உடைத்த படையப்பா சீக்ரெட்

இவ்வாறு இந்த ஐந்து படங்களில் இடம்பெற்ற பாடல்களில் ரம்யா கிருஷ்ணன் அச்சு அசல் ஐட்டம் டான்சராகவே, கிளாமர் தூக்கலான உடையில் ஆடி ஹிட் கொடுத்திருக்கிறார். அதிலும் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் இன்றும் அப்படியே கண்ணுக்குள்ளே நிற்கிறது.

Trending News