சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நிஜ வாழ்க்கையிலும் ஸ்போர்ட்ஸ்மேனாக சாதித்து காட்டிய 6 பிரபலங்கள்.. அவார்டை குவித்து வரும் அஜித்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஆனால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிலர் சினிமாவிலும் சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி சினிமா, விளையாட்டு என இரண்டிலுமே தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அவ்வாறு உள்ள 6 பிரபலங்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

சரத்குமார் : சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அந்த காலகட்டத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல் போன்ற நடிகர்களுக்கு அடுத்தபடியாக தனக்கான ரசிகர் கூட்டத்தை பெற்றார். அதுமட்டுமின்றி தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் 1974 ஆம் ஆண்டு சரத்குமார் தனது 20 வயதிலே மிஸ்டர் மெட்ராஸ் அதாவது சென்னை ஆணழகன் என்ற போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்றார்.

Also Read :சரத்குமார், சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறினாங்க.. ஆனா ஹீரோவாக இருந்து விலனாக மிரட்டிய ஒரே நடிகர்

அஜித் : அல்டிமேட் ஸ்டார் அஜித் பைக் ரேஸ் மீது தீராத ஆசை கொண்டவர். கார் ரேஸ், பைக் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் துப்பாக்கி சூடு போன்ற பல விளையாட்டுகளில் அஜித்துக்கு ஈடுபாடு உள்ளது. தற்போது கூட அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

விஷ்ணு விஷால் : விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிகுழு, ஜீவா போன்று விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் விஷ்ணுவிஷால் கிரிக்கெட் நன்கு ஆடக் கூடியவர். சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் விஷ்ணு விஷால் கண்டிப்பாக இடம் பெறுவார்.

Also Read :விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்

வினய் : ஹீரோவாக நடித்ததை காட்டிலும் தற்போது வில்லனாக நடித்து மாஸ் காட்டி வருகிறார் நடிகர் வினய். இவர் ஒரு ரக்பி வீரர், இந்த விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் நடித்த உன்னாலே உன்னாலே படத்தில் ரக்பி விளையாடி இருப்பார்.

ஜெனிலியா : விஜய்யின் சச்சின் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெனிலியா. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஜெனிலியா மாநில அளவிலான தடகள வீராங்கனை, ஓட்டப்பந்தய வீராங்கனை, தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனை ஆவார்.

Also Read :கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

ரித்திகா சிங் : மாதவனின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரித்திகா சிங். இறுதிச்சுற்று படமே குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதனால் குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங் இப்படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்தனர். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

Trending News