வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காடுகளை மையமாகக் கொண்டு வெற்றி கண்ட 6 படங்கள்.. வேறு பரிமாணத்தில் அசத்திய கோவை சரளா

படங்களில் காடுகள் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதமாகவும் மற்றும் அங்கு வாழும் மக்களின் அவலத்தை உணர்த்தும் விதமாக வெளிவரும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது போன்ற மாறுபட்ட படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இயக்குனர்கள்.

மேலும் இத்தகைய படங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பெற்று வெற்றி கண்டிருக்கிறது. அவ்வாறு காடுகளை மையமாகக் கொண்டு வெற்றி கண்ட 6 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: பிரபு சாலமனை வச்சு செய்த பத்திரிக்கையாளர்கள்.. செம்பி படத்தால் வந்த வினை

கும்கி: 2012ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் யானையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் காட்டப்படும் ரம்யமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தற்போது இப்படத்தின் பார்ட் 2 படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

செம்பி: கடந்த ஆண்டு வெளிவந்த இப்படத்தில் கோவை சரளா தன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியது என்றே கூறலாம். இதில் பெண் குழந்தைக்கு ஏற்படும் அநீதியை எதிர்த்து போராடுவது போன்று கதை அமைத்திருப்பார் பிரபு சாலமன். மேலும் இவர் இப்படத்தில் காட்டையும் விட்டு வைக்காத அரசியல்வாதிகளின் அட்டூழியத்தை வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: கோவை சரளாவை ஓவர்டெக் செய்ய வரும் நடிகை.. ஹீரோயின் சப்ஜெக்ட்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறம் இயக்குனர்

விடுதலை: அண்மையில் வெளிவந்து வெற்றி கண்ட படம் தான் விடுதலை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். மேலும் நகைச்சுவையில் கலக்கிய சூரிக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் நடித்த சூரியின் நடிப்பு மற்ற நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

காடன்: 2021ல் வெளிவந்த இப்படம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெற்றி கண்டது. மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் யானையிடம் நண்பனை போல பழகும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் ராணா. இப்படம் காட்டில் இருக்கும் வளங்களை அழிப்பதால் உண்டாகும் அவலத்தை குறிக்கும் விதமாக கதை அமைந்திருக்கும்.

Also Read: பேத்திக்காக 80 வயது கிழவியாக உருமாறிய கோவை சரளா.. செம்பி பிரிவியூ ஷோ விமர்சனம்

பேராண்மை: 2009ல் எஸ் பி ஜனார்த்தன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பேராண்மை. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருப்பார். மேலும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்காக தயாரித்த ஏவுகணையை சீர்குலைக்கும் எண்ணத்தில் வரும் கூட்டத்தை எதிர்ப்பது போன்று கதை அமைந்திருக்கும். இப்படத்தில் ஜெயம் ரவியின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு சிறப்பு கூட்டியது என்றே கூறலாம்.

மைனா: 2019ல் வெளிவந்த இப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருப்பார். இப்படத்தில் விதார்த், அமலா பால், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படம் இவர்கள் இருவரின் காதல் உருக்கத்தை உணர்த்தும் படமாக அமைந்திருக்கும். இந்த படத்தில் தம்பி ராமையாவின் நகைச்சுவை கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்

இதன் வரிசையில் தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை முன்வைக்கின்றது.

 

 

Trending News