புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆள் அட்ரசே தெரியாமல் போன 5 வாரிசுகள்.. கமல் ரஜினியிடம் சிபாரிசு செய்தும் பிரயோஜனமே இல்லை

சினிமா துறையை பொறுத்தவரையிலும் பிரபலங்களாக இருக்கக்கூடியவர்களின் வாரிசுகள், சினிமாவில் நடிப்பதற்கு எளிதாக வாய்ப்பினை பெற்று விடுகின்றனர். ஆனால் இவர்கள் நடிக்கும் படங்கள் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறாமல் போனது என்றே சொல்லலாம். இதனால் ஒரு சில படங்களுக்கு மேல் ஆள் அட்ரஸ்சே இல்லாமல் போய்விட்டனர். அப்படியாக சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக இருக்கக்கூடியவர்களின் 5 வாரிசு நடிகர்களை இங்கு காணலாம்.

சக்தி: இவர் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கக்கூடிய பி வாசுவின் மகனாவார். தொடர்ந்து தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு இவர் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த இவர் துணை நடிகராகவும் நடித்துள்ளார். தற்பொழுது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

Also Read: 5 மாஸ் ஹீரோக்களுக்கு கொடுத்த தரமான படம்..வாழ்நாளில் மறக்க முடியாத படங்களை கொடுத்த பி வாசு

சாந்தனு: இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் மகன் தான் சாந்தனு. வேட்டிய மடிச்சு கட்டு என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் சக்கரகட்டி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறாமல் போனதால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ளார்.

மனோஜ்: பிரபல இயக்குனராக இருக்கக்கூடிய பாரதிராஜாவின் மகன்தான் நடிகர் மனோஜ். ஆரம்ப கால கட்டங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் தாஜ்மஹால் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சமுத்திரம் படத்தில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவரின் அப்பாவின் மூலம் சினிமாவில் நுழைந்து இருந்தாலும் பாரதிராஜாவின் அளவிற்கு, புகழின் உச்சியை தொட முடியவில்லை என்றே சொல்லலாம்.

Also Read: விஷாலை வெளுத்து வாங்கும் சாந்தனு.. இது மக்களுக்கு சம்பந்தமில்லாத வேலை

ஆனந்த் பாபு: தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக இருந்த நாகேஷின் மகன் தான் ஆனந்த் பாபு. இவர் டான்ஸர் என்னும் படத்தின் மூலம் சினிமா துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போனது.

அஸ்வின்: குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்த எஸ் வி சேகரின் மகன்தான் அஸ்வின் குமார். தமிழில் வேகம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு கமல், ரஜினி என டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடியவர்களே சிபாரிசு செய்தும் ஜெயிக்க முடியாமல்  திணறி வருகிறார்.

Also Read: அப்பா பெயரை கெடுத்த ஆனந்த்பாபு.. குடியால் குடி மூழ்கிய குடும்பம்

Trending News