புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பல சர்ச்சையால் அஜித் நடிக்க முடியாமல் போன 6 சூப்பர் ஹிட் படங்கள்.. 20 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல்

கோலிவுட் டாப் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜித் குமார், 20 வருடங்களுக்கு முன் ஏகப்பட்ட சருக்கல்களை சந்தித்துள்ளார். அதிலும் இவர் நடிக்க இருந்த 6 சூப்பர் ஹிட் படங்களில் பல சர்ச்சைகளின் காரணமாக நடிக்க முடியாமல் போனது. அந்தப் படங்களைப் பற்றி பார்ப்போம்.

சாருமதி: 1997 ஆம் ஆண்டு அஜித் சாருமதி என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார். இந்த படத்திற்கு தேவா இசை அமைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அஜித் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த படத்தில் அஜித் நடிப்பதை குறித்து பல சர்ச்சைகள் கிளம்பியதால், படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

நந்தா: பாலா இயக்கத்தில் சூப்பர் ஹிட் ஆன சேது படத்திற்கு பிறகு 2001 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து நந்தா என்ற படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்தில் அஜித்தும் கமிட் ஆகி அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம்  ரிலீஸ் ஆனது. ஆனால் அதன் பிறகு பாலாவுடன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அஜித் படத்திலிருந்து விலகினார். பின்பு அஜித்துக்கு பதில் சூர்யா நந்தா படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். 

Also Read: இயக்குனர்கள் கொடுத்த டார்சலால் அஜித் கைவிட்ட 5 படங்கள்.. லட்டு மாதிரி சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்

மிரட்டல்: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம்தான் மிரட்டல். இந்த படத்திற்காக அஜித் மொட்டை அடிக்க வேண்டும் என்று ஏஆர் முருகதாஸ் சொல்லியதால், அதை விரும்பாத அஜித் படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பின் அதே கதையில் சூர்யா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் கஜினி. 

இதிகாசம்: சிட்டிசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சரவண சுப்பையாவுடன் இணைந்து அஜித் நடிக்க இருந்த படம் தான் இதிகாசம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் இணையத்தில் வெளியானது. ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்படாமல் படம் டிராப்பானது. இந்தப் படத்தைக் குறித்து பல சர்ச்சைகள் கிளம்பியதால் தான் அஜித் விலகியதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read: அஜித் கழட்டிவிட்ட இயக்குனருக்கு தோள் கொடுக்கும் கமல்.. இவரை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமா.?

மகா: அஜித் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக மகா என்ற படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியானது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு அஜித்தின் காலில் அடிபட்டதால் அது சரியாகுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டதால் படம் அப்படியே டிராப்பானது. 

திருடா: அஜித் டாக்டர் கெட்டப்பில் நடிக்க இருந்த படம் தான் திருடா. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் சில நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு பிறகு நிறுத்திவிட்டனர். அதன் பின் இதே கூட்டணியில் 2004 ஆம் ஆண்டு அஜித்தின் ஜனா படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also Read: அஜித், மஞ்சு வாரியர் போட்ட பெரிய பிளான்.. தடாலடியாய் ஊத்தி மூடிய ஏகே-62 படக்குழு

இந்த 6 படங்கள் தான் அஜித் கமிட் ஆகி பல சர்ச்சைகளின் காரணமாக நடிக்க முடியாமல் போன படங்களாகும். அதிலும் சூர்யாவின் கஜினி படத்தில் முதலில் அஜித் தான் கமிட்டாகி இருந்தார் என்ற விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Trending News