வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எல்லா விஷயத்திற்கும் மூக்க நுழைக்கும் 6 நடிகர்கள்.. 20 பேர் பலியாகியும் வாயைத் திறக்கவில்லை ஏன் தெரியுமா?

சினிமாவில் பெரும்பாலும் நிறைய நடிகர்கள் எந்த பிரச்சனை வந்தாலும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி கொள்வார்கள். ஒரு சிலரே சமூகத்தில் நடக்கும் நிறைய பிரச்சனைகளுக்கு எதிர்த்து கேள்வி கேட்பது, குரல் கொடுப்பது என இருந்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதைப்பற்றி பயப்படாமல் தங்களுடைய கருத்துக்களை தைரியமாக சொல்வார்கள். அதில் குறிப்பிட்ட இந்த ஆறு நடிகர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிகமாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

சூர்யா: நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாகவே நிறைய பிரச்சனைகளுக்கு தன்னுடைய சொந்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நீட் தேர்வு பற்றி இவர் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் வைரலானது. இதற்கு மிக முக்கிய காரணம் சூர்யா குடும்பத்தினர் நடத்தும் அகரம் கல்வி அறக் கட்டளை நிறுவனம் தான்.

கார்த்தி: நடிகர் கார்த்தி தன்னுடைய அண்ணன், சூர்யா போலவே சமூக அவலங்கள் நிறையவற்றிற்கு கருத்து தெரிவித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தன்னுடைய ஆதரவை பெரிய அளவில் வழங்கி வருகிறார். இதற்காக கார்த்தியை மாநில அரசு நிறைய நேரங்களில் பாராட்டியும் இருக்கிறது.

Also Read:சிங்கத்தோடு போட்டி போடும் சிறுத்தை.. வீம்போடு எதிர்க்கத் துணியும் கார்த்தி

சித்தார்த்: நடிகர் சித்தார்த் சமூக கருத்துக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கருத்துக்களையும் ரொம்பவும் தைரியமாக பேசக்கூடிய ஒருவர். தன்னுடைய ட்வீட்களின் மூலம் நிறைய விழிப்புணர்வு செய்திகளை இவர் சொல்லி இருக்கிறார். பதவியில் இருக்கும் மிகப்பெரிய ஆட்கள் தவறு பண்ணினாலும் அதை தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒருவர்.

ஜிவி பிரகாஷ்: நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நிறைய சமூக உதவிகளை செய்து வருவதோடு அவ்வப்போது நடக்கும் குற்றங்கள் மற்றும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது ரொம்பவும் தைரியமாக களத்தில் இறங்கி இவர் பேசியிருக்கிறார்.

ஜோதிகா: நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் சினிமாவில் கம்பேக் கொடுத்த பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளுக்கும், கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றியும் தன்னுடைய கருத்துக்களை பேசி வருகிறார்.

Also Read:தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கிய கார்த்தி.. 2 மாஸ் ஹீரோக்களிடமிருந்து கல்லாவை காப்பாற்ற எடுத்த முடிவு

ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய படங்களின் மூலமும், சொந்த கருத்துக்கள் மூலமும் நிறைய சமூக அவலங்களை பற்றி பேசி இருக்கிறார். இதனால் இவருக்கு எதிராக எதிர்ப்புகள் வந்த போதிலும் பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் தன்னுடைய கருத்துக்களில் எப்போதுமே ரொம்பவும் உறுதியாக இருக்கக் கூடியவர்.

எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் இவர்கள் ஆறு பேரும் சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்தை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான். ஆளும் கட்சியை பற்றி தவறாக ஏதேனும் பேசி பட வாய்ப்புகள் வருவது நின்று விடுமோ என்ற பயத்தில் தான் இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

Also Read:மனைவியால் படாத பாடுபடும் கார்த்தி.. புது குண்டை தூக்கி வீசிய பயில்வான்

Trending News