Bobby Simha: தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்த வரைக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எந்த அளவுக்கு திறமையாக நடிக்கிறார்களோ, அதே அளவுக்கு அவர்களுடைய சொந்த வாழ்க்கை மற்றும் குணங்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதனாலேயே முன்னணி ஹீரோயின்கள் மற்றும் ஹீரோக்கள் ரொம்பவும் கவனமாக நடந்து கொள்வார்கள். இந்த ஆறு ஹீரோக்கள் நல்ல நடிப்பு திறமை இருந்தும் சொந்த காரணங்களால் சினிமா வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.
ஜெய்: சென்னை 28 திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நிறைய லோ பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்கள் வரிசையில் வந்து கொண்டிருந்த ஜெய், நடிகைகளுடன் காதல் சர்ச்சை மற்றும் குடிப்பழக்கம் போன்றவற்றால் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் இழந்துவிட்டார். மீண்டும் சினிமாவில் வெற்றி பெற போராடிக் கொண்டிருக்கிறார்.
Also Read:சின்ன பிள்ளைத்தனமா பட்டத்துக்கு அலையற ஆளு இல்ல.. மறைமுகமாக தாக்கி பேசிய பரத்
ஜீவன்: கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படத்தின் மூலம் வில்லனாக தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஜீவன். இவன நடிப்பில் வெளியான திருட்டுப் பயலே திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பறிபோக காரணமாக இருந்தது அவருடைய குடிப்பழக்கம் தான்.
விமல்: நடிகர் விமலின் களவாணி திரைப்படம் ரிலீஸ் ஆன போது அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து நல்ல, நல்ல படங்களை கொடுத்துக் கொண்டிருந்த விமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதன் பின்னர் சில காலங்கள் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
பாபி சிம்ஹா: ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர் என இரண்டிலுமே தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பியவர் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா திரைப்படம் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. எந்த அளவுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாரோ, அதே அளவுக்கு இவருக்கு ஈகோவும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஒருவேளை வந்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி இருந்தால் விஜய் சேதுபதிக்கு போட்டியாக இவர் களத்தில் இருந்து இருப்பார்.
Also Read:சிக்ஸ் பேக் வைத்து பிரயோஜனம் இல்லாத 5 நடிகர்கள்.. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காதல் பரத்
ஆரி: நெடுஞ்சாலை மற்றும் மாயா போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் ஆரி. மேலும் பிக் பாஸ்க்கு சென்ற பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. போட்டியில் டைட்டில் ஜெயித்து வெளியில் வந்த பிறகு இவர் பேசிய தேவை இல்லாத பேச்சுகளே ரசிகர்களுக்கு இவர் மீது சலிப்பு கட்ட காரணமாக அமைந்துவிட்டது.
துருவ் விக்ரம்: நடிகர் சீயான் விக்ரம் எப்படியாவது தன் மகன் துருவ்வை சினிமாவில் ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்று நிறைய முயற்சிகளை செய்தார். ஆனால் அவர் அளவுக்கு துருவ் விக்ரம் சினிமாவில் அக்கறை காட்டுவது போல் தெரியவில்லை. குடிப்பழக்கம், ஊர் சுற்றுவது என மொத்தமாக வாய்ப்புகள் தேடும் முயற்சியை கைவிட்டு விட்டதால், இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் எதுவுமே இல்லை.
Also Read:ஒரு பட வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருக்கும் பரத்.. கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத பரிதாப நிலைமை