ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

இந்தியாவே பெருமைப்பட்ட 6 தமிழ் நடிகைகள்.. முதன் முதலில் லட்சத்தில் சம்பளம் வாங்கிய ஒரே நடிகை

6 Tamil Heroines Pride Of Indian Cinema: தற்போது இருக்கும் தொழில்நுட்பங்களால் ஒரு நடிகை எந்த மொழியில் நடித்தாலும், மற்ற மொழி ரசிகர்களுக்கு கூட அவர் பரீட்சயமாகிவிடுவார். ஆனால் 60களின் காலகட்டத்திலேயே இந்த ஐந்து தமிழ் நடிகைகள் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதோடு, இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு தங்களுடைய நடிப்புத் திறமையால் பல சாதனைகளை செய்து இருக்கிறார்கள்.

கே பி சுந்தராம்பாள்: மேடை நாடகம், அரசியல், சினிமா என அத்தனை துறையிலும் சிறந்து விளங்கிய நடிகை தான் கே பி சுந்தராம்பாள். நடிகர் கிட்டப்பா உடன் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்குள் வந்த இவர், அவருடைய மறைவிற்குப் பிறகு எந்த நடிகர்களுடனும் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்து அவ்வையார், மணிமேகலை போன்ற படங்களில் நடித்தார். இவர் தான் முதன் முதலில் இந்திய சினிமாவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர்.

Also Read:திருமணமான நடிகர்களை வளைத்து போட்டு பின் பிரிந்து சென்ற 6 நடிகைகள்.. வசமாக சிக்கிய விக்கி-நயன் ஜோடி

டி ஆர் ராஜகுமாரி: நடிகை டி.ஆர் ராஜகுமாரி சினிமாவிற்கு வந்த புதிதில் அவர் நடித்த இரண்டு மூன்று படங்கள் படுதோல்வியை அடைந்தன. அதன் பின்னர் 1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ஆகும். இதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம் மற்றும் படத்தின் இறுதியில் வரும் டிரம்ஸ் நடனம் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பொழுது ராஜகுமாரி அதில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார்.

பத்மினி: திருவாங்கூரில் மிகப்பெரிய தொழிலதிபரின் வீட்டு பெண்ணாக இருந்த நடிகை பத்மினி பரதநாட்டியத்தின் மூலம் சினிமாவில் காலடி பதித்தார். இவர் முதன் முதலில் அறிமுகமானது இந்தியில் தான். தமிழ் சினிமா இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்திய சினிமாவின் நாட்டிய பேரொளி என்றால் அது பத்மினி தான் என ரசிகர்களே பெருமைப்படும் அளவிற்கு இவருடைய நடனம் இருந்தது.

வைஜெயந்திமாலா: நடிகை வைஜெயந்திமாலா சிறந்த பரதநாட்டிய கலைஞர் மற்றும் கர்நாடக இசை கலைஞர் ஆவார். வைஜெயந்திமாலாவின் பெயரும் புகழும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய அளவில் இருந்தது. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இவர் அந்த காலத்திலேயே தைரியமாக அரசியலில் குதித்து ஜெயித்தும் இருக்கிறார்.

Also Read:காமெடியில் அசத்திய கமலின் 5 படங்கள்.. பட்டித் தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய சண்முகி

ஸ்ரீதேவி: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் தேவதையாக வலம் வந்தார். இந்தி சினிமாவிற்குள் நுழைந்த இவர் எந்த உதவியும் இல்லாமல் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு அங்கேயும் நம்பர் ஒன் நாயகியாக இருந்தார். ஸ்ரீதேவி மறைந்த பிறகு அவருடைய கலைப்பணிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக இந்திய அரசு தேசியக்கொடி போர்த்தி அவருக்கு மரியாதை செய்தது.

ஹேமமாலினி: நடிகை ஹேமமாலினி நடனமாடும் பெண்ணாக சினிமாவிற்குள் நுழைந்து பின் மிகப்பெரிய நடிகையாக மாறி இருக்கிறார். இந்திய சினிமாவில் முதன் முதலில் கனவு கன்னி என்று அழைக்கப்பட்டவர் இவர் தான். இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அவை தலைவராகவும் இவர் இருந்திருக்கிறார். பத்மஸ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Also Read:ராஜ்கிரணிடம் சிக்கி சின்னாபின்னமான 4 நடிகைகள்.. ஊருக்கு தான் உபதேசம், வெட்ட வெளிச்சமான நிஜ முகம்

- Advertisement -spot_img

Trending News